தமிழக செய்திகள்
கோவை மாவட்டத்தில் அதிகரிக்கும் ‘டெங்கு’ – கொசு பெருக்கத்துக்கு காரணமான 12 பேருக்கு நோட்டீஸ்
கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் டெங்கு பரவலுக்கு காரணமாக இருந்த 12 பேருக்கு சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பருவ மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படும். இதனால் வீடு, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திறந்த வெளியில் பல நாட்கள் தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு காய்ச்சலை ஏற்படும் ‘ஏடீஸ்’ கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி பாதிப்பை … Read more
விஜய் செய்து காட்டினார்! ரஜினி, கமல் செய்தார்களா? விஜய் ஆதரவாக பேசும் அதிமுக!
நடிகர் விஜய் நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளத்தில் நிவாரணம் கொடுத்து உதவினார், மற்ற ரஜினி கமல் யாராவது கொடுத்தார்களா? என்று செல்லூர் ராஜு பேசி உள்ளார்.
மக்களவை தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு – காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தல்
சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலநிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணித் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய செயலர் சிரிவெல்ல … Read more
பணிப்பெண் சித்ரவதை விவகாரம் – 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
சென்னை: வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக 2 நாட்களில் தமிழக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூவில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன்-மெர்லினா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் வேலைபார்த்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்த அந்தப் பெண்,எம்எல்ஏ மகன் குடும்பத்தார் … Read more
ரவுடி கருக்கா வினோத் மீது நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது நீதிமன்றத்தில் என்ஐஏ 680 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த ஆண்டு அக்.25-ம் தேதி ரவுடி கருக்கா வினோத், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கருக்கா வினோத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மத்திய … Read more
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்றார்
ஸ்ரீரங்கம்: பிரசித்தி பெற்றதும், 108 வைணவத்தலங்களுள் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை தமிழகம் வந்த பிரதமர், சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். … Read more
மதுரை கலைஞர் நூலகத்தில் 4.50 லட்சம் புத்தகங்களை பராமரிக்க 30 நூலகர்கள் போதுமா?
மதுரை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரையில் கடந்த ஆண்டு ஜூலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.215 கோடியில் 3.56 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்துக்கு தினமும் 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். 4.50 லட்சம்புத்தகங்கள் உள்ளன. ஆனால், இந்த … Read more