அன்புமணிக்கு அந்த பயம்.. அதனால் தான் இப்படி நடந்துகொள்கிறார்: அமைச்சர் சொன்ன காரணம்!

அமலாக்கத்துறை கைது செய்துவிடும் என்ற பயத்தின் காரணமாக அன்புமணி டெல்லியைக் கண்டு பம்முகிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பில் தொடச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களில் ஆங்காங்கே வன்முறைகளும் அரங்கேறின. தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் வெவ்வேறு சூழல்களில் போராட்டங்கள் நடத்துகின்றன ஆனால் அவை பெரும்பாலும் வன்முறை வழிக்கு செல்வதில்லை. பாமகவின் போராட்டங்கள் மட்டும் வன்முறைப் பாதைக்கு திருப்பிவிடப்படுவதாக அரசியல் … Read more

டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி… அமலாக்கத்துறையின் திட்டம் என்ன?

Senthil Balaji ED Investigation: அமலாக்கத்துறை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்துச்சென்று விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 5 ரூபாய் வசூல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 117, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 103 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இம்மாவட்டங்களில் 4 இடங்களில் மட்டும் டாஸ்மாக் பார் நடத்தவும், 5 இடங்களில் தனியார் மதுபான பார்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 இடங்களில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பார்கள் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்டன. இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் புகார்அளித்தனர். தற்போது மீண்டும் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் … Read more

கிருஷ்ணர் வாய திறந்தப்போ உலகமே தெரிஞ்சிதாம்… செந்தில் பாலாஜி வாய திறந்தா… செல்லூர் ராஜூ ஜாலியோ ஜாலி!

மதுரையில் வரும் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லுர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்தப்படியே செம ஜாலியாக பதில் அளித்தார் செல்லூர் ராஜூ. அதாவது செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யாரெல்லாம் மாட்டுவார்கள் என்று நமது முதலமைச்சர் போல் எங்களுக்கு ஜோசியம் சொல்ல தெரியாது … Read more

வெயில், மழைக்கு ஒதுங்கிட நிழற்கூடம் இல்லாத பேருந்து நிலையம்: ஆத்தூர் வரும் பயணிகள் தவிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகராட்சிகளில் ஒன்று ஆத்தூர். மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர், வியாபாரம், மருத்துவம், கல்வி உள்பட பல துறைகளில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே, கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல் வட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள், அண்டை மாவட்டமான கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆத்தூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆத்தூரில் வசிஷ்ட நதியை ஒட்டி, பெரிய அளவிலான பேருந்து நிலையம் … Read more

எடப்பாடியை படு மோசமாக விமர்சித்த ஸ்டாலின்: என்ன முதல்வர் இப்படி இறங்கிட்டாரு?

குடிமைப் பணி அதிகாரிகளை நியமித்தல், பணி மாறுதல் செய்தல் ஆகியவை தொடர்பான அதிகாரத்தை டெல்லி முதலமைச்சரிடம் இருந்து பறித்து துணை நிலை ஆளுநரிடம் வழங்கும் வகையில் டெல்லி அவசர சட்ட மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது. சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மசோதா வாக்கெடுப்பில் கலந்துகொள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவைக்கு வந்திருந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் … Read more

“சென்னையில் வீராவேசம்… டெல்லியில் அடிமையாக இருப்பது ஏன்?” – அன்புமணிக்கு அமைச்சர் கேள்வி

சென்னை: “என்எல்சி விவகாரத்தில் சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத் துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?” என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “என்எல்சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் … Read more

தூத்துக்குடி டூ இலங்கை… கப்பல் போக்குவரத்தால் இவ்வளவு நன்மைகளா… அரசு எடுக்கும் முடிவு என்ன?

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். கடந்த மாதம் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்பு இருநாடுகளின் உறவு மேம்பாடு குறித்து பேசிய பிரதமர் மோடி இதனை அறிவித்தார். நாகப்பட்டினம் – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இருப்பினும் அந்த பணிகள் … Read more

பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலை நள்ளிரவில் திடீர் அகற்றம்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகரில் பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலையை வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் நேற்று நள்ளிரவு திடீரென அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட பாஜக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்துக்குள் நேற்று மாலை பாரத மாதா சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதை அறிந்த வருவாய்த் துறையினர் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கு … Read more