பொள்ளாச்சி வால்பாறை சாலையில் யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் எச்சரிக்கை

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை.  

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில் … Read more

TET தீர்ப்பு: ஆசிரியர்களுக்கு நிம்மதி… தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government: TET தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.11) தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிஐடியு தொழிற்சங்கம் நீண்ட காலமாக போராட்டத்தில் உள்ளது. அவர்களை அழைத்துப் பேசி உள்ளோம். தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில் 3 ஆண்டுகளில் 2 முறை ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்து உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் 1 ஊதிய … Read more

மூதாட்டி மீது கொடூர தாக்குதல், அரஸ்ட் ஆன அரசியல்வாதி: குண்டர் சட்டமும் பாயுமா?

தூத்துக்குடியில் திமுக கிளை செயலாளரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மூதாட்டி உள்ளிட்ட உறவினர்கள் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவால்தான் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை

பரமக்குடி: பாஜகவால்தான் தமிழகத்தில் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது, பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது, என தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரமக்குடியில் இன்று தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் மற்றும் கட்சியினர் மரியாதை செய்தனர். பின்னர் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: காங்கிரஸ் … Read more

புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!

New Ration card : புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்கள் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இனி அன்புமணி தனது இனிஷியலை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம், பெயருக்குப் பின்னால் ராமதாஸ் என்றுகூட எழுதக்கூடாது என்று ஆவேசமாகக் கூறினார். கடந்த சில மாதங்களாகவே, ராமதாஸுக்கும் – அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. … Read more

விருத்தாசலத்தில் கொலை வெறி தாக்குதல்.. கஞ்சா போதை, ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை!

விருத்தாசலம் அருகே ரீல்ஸ் மோகத்தால், ஒருவரை கம்பியால் தாக்கி வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 3 இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: ​தி​முக ஆட்​சிக்கு வந்த நான்​கரை ஆண்​டு​கள் கடந்​து​விட்ட நிலை​யிலும், எங்​களது கோரிக்​கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என ஓய்வு பெற்ற சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் குற்​றம் சாட்டி உள்​ளது. குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்​பது உட்பட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அனைத்து சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம், சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. சங்​கத்​தின் மாநில தலை​வர் கே.பழனி​சாமி தலைமை வகித்​தார். இதில், 200-க்​கும் … Read more