அவனியாபுரம்: கத்தி, குற்றப்பிண்ணனி கொண்டவர்களின் காளைகளுக்கு அதிரடி தடை..!

avaniyapuram jallikattu: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பேர் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் குற்றப்பிண்ணனி கொண்டவர்களின் காளைகள் அவிழ்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகியின் கோவை – அயோத்தி இருசக்கர வாகன யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

கோவை: கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு புறப்பட்ட பாஜக பெண் நிர்வாகியின் இருசக்கர வாகன யாத்திரைக்கு போலீஸார் திடீர் தடை விதித்தனர். அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் இந்துஷா காஞ்சி என்பவர் இருசக்கர வாகன யாத்திரை செல்ல திட்டமிட்டார். கோவை ராம் நகர் ராமர் கோயிலில் இருந்து சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம் … Read more

சம்பிரதாயங்கள் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… கட்டுப்பாடுகள் இதுதான்..!

avaniyapuram jallikattu 2024 restrictions: மதுரையில் கோலாகலமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அரசு மற்றும் காவல்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமான சம்பிரதாயங்களுக்கு அனுமதியில்லை.   

காணும் பொங்கல் | சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,500 காவலர்கள் 

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜன.17 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை … Read more

ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அயோத்திக்கு வர துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு

சென்னை: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம்தேதி நடைபெற உள்ளது. கோயிலில் அன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் அறிவுரைப்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. திறப்பு விழா ஏற்பாடுகள், அழைப்பிதழ் வழங்கும் பணிகளை … Read more

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று விலகியது

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று விலகியது. வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனினும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வறண்ட … Read more

பொங்கல் தின கொண்டாட்டம் உழவுத் தொழிலையும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் விழா: ஆளுநர்கள், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உழவு தொழிலையும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் திருவிழா, பொங்கல் விழா என்று ஆளுநர்கள், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பவுஷ்பர்வ, லோரி ஆகிய தினங்களை கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள். நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமதுவளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் … Read more

பள்ளிக்கு சொந்த நிலத்தை கொடுத்த பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தில் விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரையில் பள்ளிக்கு சொந்த நிலம் 1.52 ஏக்கரை வழங்கிய கொடிக்குளத்தைச் சேர்ந்த பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தில் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக மதுரை கொடிக்குளத்தைச் … Read more

போகி பண்டிகை காரணமாக சென்னையில் மோசமான அளவில் காற்று மாசு – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: ஜன.13 காலை 8 மணி முதல் ஜன.14 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், சென்னையில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"போகி பண்டிகையின் போது, நகரவாசிகள் ரப்பர் டயர்கள், டியூப்கள், பாய், கம்பிகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை … Read more