குறு, சிறு நிறுவனங்கள் கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன், கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட, முக்கிய உதவிகளை வழங்கிட மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திகுறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் … Read more

கோவையில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழை – 100+ வீடுகளில் மழைநீர்; போக்குவரத்து பாதிப்பு

கோவை: கோவையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலையோர தாழ்வான இடங்களில், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையின் பல்வேறு இடங்களில் நேற்று (டிச.08) இரவு முதல் இன்று (டிச.09) காலை வரை கனமழை பெய்தது. கனமழையால் மாநகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அவிநாசி சாலையில் உள்ள அண்ணா … Read more

கோவை – மேட்டுப்பாளையத்தில் கனமழை: வாழைகள் சேதம்; வீடுகளை சூழ்ந்த மழைநீர்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையால் வாழைகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. வீடுகளுக்குகள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் நகரப் பகுதி, சிறுமுகை, காரமடை, பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளி்ல் நேற்று கனமழை பெய்தது. இந்த கனமழையால் மருதூர் ஊராட்சிக்குட்பட்ட ஏழுசுழி தடுப்பணை நிரம்பியது. மேலும், நீர்க்கசிவும் ஏற்பட்டது. தகவல் அறிந்த மருதூர் ஊராட்சி நிர்வாகத்தினர் மணல் மூட்டைகளை … Read more

சென்னை: லிப்டில் சிக்கி உயிரிழந்த 23 வயது இளைஞர் – 15 நாளில் மணப்பெண் மரணம்

துரைப்பாக்கம் Zepto நிறுவனத்தில் 23 வயது இளைஞர் லிஃப்டில் சென்றபோது தலைமோதி பரிதாபமாக உயிரிழந்தார்.  திருவள்ளூர், பிஞ்சிவாக்கத்தில் திருமணமாகி 15 நாளில் குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது புதுப்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  

இயற்கை பேரிடர் காலத்தில் சென்னையில் விமானம் இறங்க முடியாதபோது திருச்சி இருக்க பெங்களூரு எதற்கு?

திருச்சி: இயற்கை பேரிடர் காலங்களில் சென்னை விமானநிலையத்தில் விமானங்களை கையாள முடியாதபோது, பெங்களூருவுக்குப் பதிலாக, திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தும் வகையில் ஓடுதள விரிவாக்கத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக டிச.4-ம் தேதி சென்னையில் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி, சர்வதேச விமானநிலைய செயல்பாடும் முற்றிலும் முடங்கியது. புயல், மழை, மூடுபனி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் சென்னை விமானநிலையத்தை பயன்படுத்த முடியாத நிலை … Read more

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி எப்போது கொடுக்கப்படும்? யார் யாருக்கு கிடைக்கும்?

Michaung cyclone relief fund: மிக்ஜாம் புயல் நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், எப்போது முதல் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

‘மிக்ஜாம்’ வெள்ளம் பாதித்த மக்களுக்கு ரூ.6,000 – தமிழக அரசின் நிவாரண உதவி, இழப்பீடுகளின் முழு விவரம்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு இழப்பீடுகளையும் நிவாரண உதவிகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் … Read more

மிக்ஜாம் புயல்: நிவாரண தொகை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ளார். குடிசை வீடுகள் மற்றும் சேதமடைந்த படகுகள் உள்ளிட்ட நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.   

நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில்,”தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு … Read more

மழை, வெள்ளம் பாதித்த பகுதி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்துதல் அவசியம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மழை, வெள்ளம் பாதித்த பகுதிகள் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் … Read more