பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலும் இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – கோயம்புத்தூர், பெங்களூரு – திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் – கோயம்புத்தூர், பெங்களூர் – திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்விவரம்: தாம்பரத்தில் இருந்து ஜன.17, 18 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு சிறப்புரயில் … Read more

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

சென்னை: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 22-ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி எஸ்.அல்லி, அவரது நீதிமன்ற காவலை 15-வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை … Read more

“அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன்” – இபிஎஸ் தகவல்

சேலம்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில், வாய்ப்பிருந்தால் பங்கேற்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து வழிகளிலும் அதிமுக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. வேட்பாளர் தேர்வு எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதும், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கட்சியானது சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. பாகுபாடு பார்ப்பதில்லை. யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு போகலாம். ராமர் … Read more

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் … Read more

3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் 6 கார்கள் பரிசு! 

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறந்த காளைகளுக்கு தலா ஒரு கார், சிறந்த வீரர்களுக்கு தலா ஒரு கார் என மொத்தம் 6 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் இன்று நடந்தது.கூட்டத்துக்குப் பின் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு … Read more

7வயது சிறுவன் மர்மமான முறையில் கொலை!19 வயது இளைஞர் கைது..என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களையும், காளைகளையும் ஊக்குவிக்கும் விதமாக கார், இருசக்கர வாகனங்கள், தங்ககாசு, வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு விதமான … Read more

செந்தில் பாலாஜியின் சகோதரர் புதிதாக கட்டி வரும் பங்களாவில் வருமான வரித் துறை 2-வது நாளாக ஆய்வு

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் வருமான வரித் துறை மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு, புதிதாக அவர் கட்டி வரும் பங்களா, அமைச்சரின் ஆதரவாளர்கள், அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மே மாதம் 26-ம் முதல் தொடங்கி அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கொங்கு … Read more

அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர்கள் மறைமுகமாக தேர்வா? – இபிஎஸ் மறுப்பு

சேலம்: “யார், யாருக்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் முறையான தலைமைக் கழக அறிவிப்புக்குப் பின்னர், அங்கு வழங்கப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர், மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள், கலந்தாலோசித்து யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், … Read more