தமிழக செய்திகள்
இன்று விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு
சென்னை: சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று, நீர்நிலைகளில் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் 1,500 சிலைகள் பிரம்மாண்டவையாகும். கடந்த சில நாட்களாக விநாயகர் சிலைகள் நீர் … Read more
தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க பல்கலைக்கழகங்கள் துணையாக இருக்கும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி
சென்னை: தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க பல்கலைக்கழகங்கள் துணையாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ் அறிஞர்களுடன் ஆளுநர் ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: மொழிதான் மக்களின் ஆன்மா. தமிழ் மொழி குறித்து நான் அறிந்தபோது, அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை புரிந்துகொண்டேன். தமிழில் `அறம்’ என்ற சொல்லுக்கு இணையான மொழிபெயர்ப்பை, எந்த ஐரோப்பிய மொழியிலும் நான் கண்டதில்லை. இந்திய அளவில் தமிழுக்கு இணையாக பழமையான … Read more
மானிய விலையில் விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள்
சென்னை: சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு 3,332 விஎஸ்டி பவர் டில்லர் சாதனங்களை மானிய விலையில் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சிறிய பரப்பிலான வயல்கள், தோட்டங்களில் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை குறைத்தல் மற்றும் வேளாண் உற்பத்தி திறனை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில், பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியில் … Read more
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (செப். 24) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை சில இடங்களிலும், வரும் 26 முதல் 29-ம் … Read more
உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: உடல் உறுப்பு தானம் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு அடைந்த துயரச் சூழலிலும், அவர்களது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. தமது உறுப்புகளைத் … Read more
அண்ணா பற்றி அண்ணாமலை பேசிய விவகாரம்: திராவிட கட்சிகள் மீது திருப்பூர் சு.துரைசாமி அதிருப்தி
திருப்பூர்: “முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக பேசிய அண்ணாமலைக்கு திராவிட கட்சிகள் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரையில் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக சொல்லி உள்ளார். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். அப்போது உடனிருந்த … Read more
நிதி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் திட்டத்தை கொண்டு வருவோம் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தொகுதி எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: மகளிருக்கு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்து … Read more
“கணவாய்ப்புதூர் பகுதியில் மக்களின் 382 ஏக்கர் நிலங்களைப் பறிக்க வருவாய்த் துறை துடிப்பதா?” – ராமதாஸ்
சென்னை: “சேலம் மாவட்டம் கணவாய்ப்புதூர் பகுதியில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு சொந்தமான நிலங்களை, அரசுக்கு சொந்தமான நிலங்கள் என்று அறிவித்து, கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசின் வருவாய்த் துறை ஈடுபட்டிருக்கிறது. அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிலம் வழங்க வேண்டிய அரசு, அவர்கள் நிலத்தை பறிக்கிறது” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்குட்பட்ட கணவாய்ப்புதூர், கேதுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் பரந்து … Read more
தென்முடியனூர் கிராமத்தில் 8 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கோயில்: பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு
திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ததால், கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் இன்று (செப்.23) மாலை திறக்கப்பட்டதும் பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில், 80 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டன. இதை எதிர்த்து ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் … Read more