புதுச்சேரியில் கனமழை – அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் ஏராளமான ஏக்கரில் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலங்களை ஆய்வு செய்த அம்மாநில அமைச்சர் தேனீ ஜெயக்குமார், விவசாய நிலங்கள் பாதிப்பு பற்றி கணக்கெடுப்பு நடத்தி முதல்வரிடம் கலந்து பேசி நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தார். புதுச்சேரியில் தொடர் மழைப் பொழிவால் கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாகூர், ஏம்பலம், … Read more

தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்: அண்ணாமலை

தமிழகத்தில் தற்போது நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சியமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களிள் 10 இலட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை மீது நீதிமன்றம் அதிருப்தி – வாதங்களின் விவரம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் … Read more

ஆன்லைன் சூதாட்டம் | ''உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை தமிழக அரசு உடனே விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்'': அன்புமணி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரின் சமூக வலைதள பதிவில், "சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால், தமது 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள … Read more

முரசொலி நில சர்ச்சை: வழக்கின் தீர்ப்பு தேதியை குறித்த சென்னை உயர்நீதிமன்றம்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளித்த புகாரில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

முதன்மை வழக்காக விசாரிக்கிறோம் – ஸ்டெர்லைட் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவாதம்

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வழக்கறிஞர் விகாஷ் சிங், தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். முறையீட்டில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் ஆலையை நம்பி இருந்த மக்கள் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர் வேலையிழந்துள்ளனர். எனவே, … Read more

“சென்னையில் மிக கனமழை இல்லை… படிப்படியாக மழை குறையும்” – தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னை: சென்னையில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், கனமழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் மழை படிப்படியாக குறையும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நாம் எதிர்பார்த்த மழை மேகங்கள் டெல்டா மாவட்டங்கள் முதல் மகாபலிபுரம் வரை மையம் கொண்டிருந்தன. தற்போது அவை டெல்டாவிலிருந்து மேல்நோக்கி நகர்ந்து கடலூர், பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு … Read more

எடப்பாடி பழனிசாமி போடும் அரசியல் கணக்கு..! பாஜக கப்சிப் – அதிமுகவுக்கு கைகொடுக்குமா?

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது அதிமுகவுக்கு தேர்தலில் கைகொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.   

தொடர் கனமழை | சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது – பபாசி அறிவிப்பு

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னையில் நடைபெற்று வரும் 47வது புத்தகக் கண்காட்சி இன்று ஒருநாள் நடைபெறாது என்று பபாசி அறிவித்துள்ளது. 47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான வாசகர்கள் தினமும் கலந்து கொண்டு ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் திடீர் மழை காரணமாக … Read more