சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் டிச.22-ல் … Read more