மிக்ஜாம் புயல்: உதவின்னு கேட்டா ஓடோடி செய்யும் அமைச்சர்கள் உதயநிதி, டிஆர்பி ராஜா

மிக்ஜாம் புயலில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எக்ஸ் தளம் மூலம் உதவி தேவை என கூறுபவர்களுக்கு உடனடியாக அவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா.  

புயல், கனமழை மீட்புப் பணிகள் | 10 NDRF குழுக்கள் அனுப்பிவைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 குழுக்கள் பெங்களூருவிலிருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட … Read more

மிக்ஜாம் மிரட்டலில் வெள்ளக்காடாகும் சென்னை – 2015 ரிப்பீட்டு..! எப்போது மீளும்?

மிக்ஜாம் புயல் மிரட்டலில் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தாழ்வாக இருக்கும் பகுதிகளில் இடுப்பளவு நீர் தேங்கியிருக்கிறது. இந்த வெள்ள பாதிப்புகள் எப்போது குறையும் என்பதை பார்க்கலாம்.   

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க அரசு அறிவுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை, வெள்ளம் என இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் நாளை டிச.5 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 4 மாவட்டங்களில் அரசுப் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. 90 கிமீ தொலைவில் … Read more

மிக்ஜாம் புயல்: சென்னையில் உடைந்த ஏரி..! வெள்ளக்காடாகும் பள்ளிக்கரணை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில் நாராணயபுரம் ஏரி உடைந்து அதில் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.  

“5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு தரும் செய்தி இதுதான்” – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: ராகுல் காந்தியின் கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமே 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மோடி ஆட்சியை அகற்ற முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சியினர் முழு வீச்சில் செயல்படுவது தான் 5 மாநில தேர்தல் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு தருகிற செய்தி ஆகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட ஏமாற்றமளிக்கிற … Read more

சென்னையில் சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள்; கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் 

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், … Read more

புயல், கனமழை, பலத்த காற்று காரணமாக சென்னையில் 30 விமானங்கள் தாமதம்: 3 உள்நாட்டு விமானங்கள் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை, பலத்த காற்றால் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று காலை 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், மாலை … Read more

மிரட்டும் மிக்ஜாம் புயல்; மிதக்கும் சென்னை – மக்கள் பாதுகாப்பாக இருக்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், இன்று (டிச.4) தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை புயல் மேலும் தீவிரமடைந்து … Read more

சென்னை மக்களே அலெர்ட்… நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்… வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

Michaung Cyclone Updates: மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு மிக அருகில் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது கொடுத்துள்ள அப்டேட்டை இங்கே காணலாம்.