ஒருநாள் அவகாசம் கேட்ட தமிழக அரசு – வேலைநிறுத்த முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல்
சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக போக்குவரத்து தொழிற்சங்களுடன் சென்னையில் அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். இதனிடையே, தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறும்போது, "இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சரிடம் எங்களின் 6 கோரிக்கைகளை விளக்கிச் சொன்னோம். நாளை மறுநாள் அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனவே, நாளை மறுநாள் வரை … Read more