உயரும் காய்கறி விலை: தக்காளி, வெங்காயம் மீண்டும் விலை கூடுவதால் மக்கள் கவலை

மதுரை: அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் காய்கறிகள் விலை அதிகரித்து வருவது, நடுத்தர ஏழை மக்களை கடுமையாக பாதிப்படைய வைத்துள்ளன. தமிழகத்தில் காய்கறிகள் உற்பத்தி நடந்தாலும், அவை உள்ளூர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. அதனால், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. பெரிய வெங்காயம், தக்காளி போன்றவை கர்நாடகா, ஆந்திரா மட்டுமில்லாது அதிகளவு வடமாநிலங்களில் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால், … Read more

மிக்ஜாம் புயல்: குளமாகும் காஞ்சிபுரம் – 24 மணி நேரத்தில் கொட்டிய 211 மிமீ மழை..!

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 211 மிமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் இருக்கும் 82 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியிருக்கின்றன.   

“அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன்” – நடிகர் சூர்யா

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை – மியாட் மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன் என நடிகர் சூரயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது. “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! … Read more

“மிக்ஜாம் புயல்” நா ரெடி தான் வரவா.. மக்களே வெளியே செல்லாதீர்கள்! செல்பி வேண்டாம்

Cyclone Michaung Alert in Tamil Nadu: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை. சென்னை உட்பட பல மாவட்டங்களில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மக்களே கொஞ்சம் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். 

மதுரையில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு: தினந்தோறும் புதிதாக 6 முதல் 7 பேர் பாதிப்பு

மதுரை: மதுரையில் ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. 80 பேருக்கு தினமும் மற்ற வைரஸ் காய்ச்சலும் உறுதி செய்யப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக, மதுரை மாநகராட்சி பகுதியில் நீர்வரத்துக் கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வாரி இருக்க வேண்டும். அதுபோல், குடியிருப்புகள், பொது இடங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மழைநீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். டெங்கு பரவுவதற்கு காரணமான பொருட்களை அகற்றியிருக்க வேண்டும். … Read more

மிக்ஜாம் புயல்: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள்..!

மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சென்னை உள்ளிட்ட புயல் பாதிக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.  

மிக்ஜாம் புயல் | தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பொழிவும், பலத்த காற்றும் வீசப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மாவட்டங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது. ஏற்கெனவே மழை மற்றும் புயலை கருத்தில் கொண்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் பள்ளி, கல்லூரிகள், அரசு … Read more

மிக்ஜாம் புயல்: 8000 மணல் மூட்டைகள்… 31 புல்டோசர், 24 ஜேசிபி – வேலூரில் ஏற்பாடுகள் தயார்

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்க இருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக 8000 மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.   

மிக்ஜாம் புயல் | 4 மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (டிச.4) திங்கட்கிழமை அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பொழிவும், பலத்த காற்றும் வீசப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு பள்ளி, … Read more

மிக்ஜாம் புயல்: நாளை மெட்ரோ ரயில் சேவையில் பெரிய மாற்றம்! என்ன தெரியுமா?

Michaung Storm Metro Train Schedule: மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.