ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடரும்… என்கவுண்டர் சம்பவம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால்

Guduvancherry Encounter Update: கூடுவாஞ்சேரி அருகே ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் – போலீஸ் காவல் மறுப்பு

பெரம்பலூர்: பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, 2 சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தைச் சேர்ந்த … Read more

மணிப்பூருக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு… ரூ.10 கோடி மதிப்பில் ஏற்பாடு… ஸ்டாலின் எழுதிய கடிதம்!

மணிப்பூர் கலவரம் தொடர்பான செய்திகள் தினசரி தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. கடந்த மாதம் வெளியான வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது. இது ஒன்றே வன்முறை களத்தின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. பலர் வீடுகளை இழந்து, தங்கள் உறவுகளை பறிகொடுத்து தவித்து கொண்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் நடவடிக்கை எப்போது மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம் இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் … Read more

தானே கிரேன் விபத்து | உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழர்: உடல்களை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலத்தைக் கட்டிவந்த VSL லிமிடெட் கட்டுமான நிறுவனத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனிடையே, எதிர்பாரா … Read more

16 ரயில்கள் ரத்து.. தென்மாவட்ட ரயில்கள் 5 மணிநேரம் தாமதம்.. தவிக்கும் பயணிகள்!

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் பொன்மலை அருகே திருச்சி-சென்னை வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும் போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் திருச்சி ரயில்வே சந்திப்பில் புதிய வழித்தட எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8 ஆகியவற்றை இயக்குவதற்கு கடந்த 20 ஆம் தேதி முதல் இண்டர்லாக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் … Read more

திமுக நடைபயணத்துக்கு 'என் மகன் என் பேரன்' என்றே பெயர் வைப்பார்கள் – அண்ணாமலை

சிவகங்கை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் 4-வது நாளான நேற்று சிவகங்கையில் மக்களைச் சந்தித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் (முன்பு ட்விட்டர்) பதிவிட்டுள்ள அவர், “இன்றைய ‘என் மண், என் மக்கள்’ பயணம், வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் அமைந்தது மகிழ்ச்சி. மக்களைச் சந்தித்து, பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளைக் கூறும் நமது பயணத்தின் பெயர் ‘என் மண் என் மக்கள்’. மத்திய அரசின் மக்களுக்கான … Read more

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய குழந்தைகள் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

சென்னை: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள், முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சமூக நலத்துறையின் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் வாயிலாக ‘முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2001 முதல் மார்ச் 2023 வரை 9 லட்சத்து 56 பெண் குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். … Read more

போலீசாரை தாக்க வந்த ரவுடிகள்… என்கவுண்டரில் இருவர் பலி – நடந்தது என்ன?

Tambaram Encounter: தாம்பரம் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.