விவாகரத்து கோரும் ஓ.பி. ரவீந்திரநாத்… நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

OP Ravindranath Divorce Petition: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம்: நாமக்கல் இறைச்சிக் கடை உரிமையாளர் கைது

நாமக்கல்: சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் ஹோட்டலுக்கு கோழி இறைச்சி சப்ளை செய்த இறைச்சிக் கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சவர்மா எனப்படும் கோழி இறைச்சி சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி (14) என்பவர் நேற்று உயிரிழந்தார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதே ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் … Read more

விஷத்தை திணிக்கும் மார்க் ஆண்டனி… படத்திற்கு தடை கோரும் திருநங்கை – முழு விவரம்!

Criticism On Mark Antony Movie: மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் என திருநங்கை ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அப்படத்திற்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர். 

“மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகின்றனர்” – ஆர்.பி.உதயகுமார் கருத்து

மதுரை: அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், “பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாலையில் சிறப்பு வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 100 அரிசி மூட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியது: ”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வலதுபுறத்தில் கே.பழனிசாமியும், … Read more

1121.6 கிலோ எடையுள்ள பீன் சாலட்… சென்னையில் கின்னஸ் சாதனை!

SICA Cooking Competition 2023: தென்னிந்திய செஃப் அசோசியேஷன் (SICA) சார்பில் செஃப் ராஜ்மோகன் உருவாக்கிய 1121.6 கிலோ எடையுள்ள பீன் சாலட் கின்னஸ் உலக சாதனை படைத்தது.

“பாஜகவுடன் கூட்டணி இல்லை; என்.ஆர்.காங். கூட்டணி தொடரும்” – புதுச்சேரி அதிமுக அறிவிப்பு

புதுச்சேரி: “பாஜகவுடன் கூட்டணி இல்லை. என்.ஆர்.காங்கிஸுடன் கூட்டணி தொடரும்” என்று புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கூறியுள்ளார். புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயதை, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல் பேசி வருகிறார். அதிமுக கூட்டணி கட்சி என நினைக்காமல் கட்சியின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுச்சேரி மாநில அதிமுக கண்டிக்கிறது. மலிவு விளம்பரத்துக்காக பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி … Read more

பருவமழை முன்னெச்சரிக்கை: உயிரிழப்பு, பொருள் சேதங்களைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவமழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.19) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “வடகிழக்குப் பருவமழை காலத்தில் நாம் … Read more

கொடைக்கானலில் 10-க்கும் மேற்பட்ட கடைகளை சேதப்படுத்திய யானைகள்: மோயர் சதுக்கம் செல்ல தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே மோயர் சதுக்கம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், வியாபாரிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ … Read more

நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?- இபிஎஸ் கேள்வி

சென்னை: தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்’ – என்ற நம்பிக்கையுடன் திமுக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் … Read more

அரசுப் பள்ளிகளில் சீரழியும் கல்வித் தரம்; ஆசிரியர் காலியிடங்களை நிரப்புங்கள்- அன்புமணி

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்திருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இச்சீரழிவுக்கு காரணமாகும். தமிழக அரசப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் … Read more