அரசுப் பள்ளிகளில் சீரழியும் கல்வித் தரம்; ஆசிரியர் காலியிடங்களை நிரப்புங்கள்- அன்புமணி

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்திருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இச்சீரழிவுக்கு காரணமாகும். தமிழக அரசப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் … Read more

TTF வாசனை கைது செய்த காவல்துறை! பிணையிலும் வர முடியாது!

சென்னையில் இருந்து மகாராஷ்டிரா நோக்கி  பைக்கில் சென்றபோது காஞ்சிபுரத்தை அடுத்த தாமல்  பகுதியில் வீலிங் சாகசத்தின் போது TTF வாசன் பைக் விபத்து ஆனது.    

அதிமுக கூட்டணி முறிவு – முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை

சென்னை: சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். ”பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில் அண்ணாமலையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக மாநில நிர்வாகிகளிடமும் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்று பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் ‘என் மண்; என் மக்கள்’ … Read more

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமா? இத தெரிஞ்சுக்கிட்டு போங்க!

கொடைக்கானலில் இடைவெளி இல்லாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மழை. செண்பகனூர் அருகே மண் சரிவு, மண் சரிவினை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம்.  

சீமான் வழக்கு போட்டால் ஆவணங்களுடன் நிரூபிப்பேன்: நடிகை விஜயலட்சுமி

சென்னை: நான் ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கே வராது என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன். வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள். பாலசுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை அனுப்பி வைத்தார் சாட்டை துரைமுருகன். புகாரை வாபஸ் பெற்றுவிட்டு எனது அக்காவுடன் … Read more

73-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: பிரதமர் மோடிக்கு ஆளுநர்கள், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது 73-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு நல திட்டங்களை வழங்கினர். மேலும், தமிழகம், தெலங்கானாஆளுநர்கள், முதல்வர் மற்றும்அரசியல் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பிரதமருக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள். தேசத்தை வழிநடத்த அவருக்கு நல்ல ஆரோக்கியமும், ஊக்கம் அளிக்கும் தலைமைத்துவத் துக்காகவும் பிரார்த்தனைகள். தெலங்கானா ஆளுநர் தமிழிசை … Read more

டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் மாலை 5 – இரவு 10 மணி வரை கட்டாயம் இருக்க உத்தரவு

சென்னை: விற்பனை அதிகமாக இருக்கும் நேரமான மாலை 5 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக்நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள், மதுபானம்,பீர் வகைகளை அரசு நிர்ணயித்தவிலையைவிட கூடுதல் விலைக்குவிற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும், கூடுதல் விலை விற்பனை … Read more