காவிரி விவகாரத்தில் தமிழக கோரிக்கையை கர்நாடகம் எக்காலத்திலும் ஏற்றது இல்லை: துரைமுருகன்
சென்னை: “காவிரி விவகாரத்தில் இதுவரையில், தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகம் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொண்டது இல்லை. நாம் பெற்றிருக்கிற உரிமை முழுவதும் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற உரிமைகள்தான். அதேபோல வரும்காலத்திலும் பெறுவோம்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “காவிரி நீர் விவகாரத்தில், தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் சார்பில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்தோம். … Read more