“33 சதவீத இடஒதுக்கீடு பெண்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும்” – ஆளுநர் தமிழிசை கருத்து
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான திறன் அறி நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகைளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை இதில் வெளிப்படுத்தினர். பரதநாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர். ஆளுநர், மாணவர்களின் திறமைகளைக் கண்டு, மாணவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தார். ஆசிரியர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் … Read more