பாலாறு வனப் பகுதியில் மண்சரிவு: மேட்டூர் – மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மேட்டூர்: தமிழக – கர்நாடக எல்லையான பாலாறு வனச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக மைசூருக்கு செல்ல வேண்டும். இதில் காரைக்காடு முதல் பாலாறு சோதனைச்சாவடி வரை சுமார் 5 கீ.மீ சாலை ஈரோடு வனக்கோட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு ஒட்டி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை சேலம் மாவட்டம் எடப்பாடி கோட்டம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று … Read more

‘ஊதிய நிலுவை வழங்க பணம் இல்லையெனில் பேருந்துகளை விற்றுத் தரவேண்டியது தானே!’ – உயர் நீதிமன்றம் ஆவேசம்

மதுரை: ”அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க போதுமான நிதி இல்லை என்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டியது தானே” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 1.04.2014 முதல் 31.01.2017 வரை வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவை தொகை இதுவரை … Read more

தமிழகத்தில் டெங்கு பாதித்த 343 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “ஆண்டுதோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில் இதுவரை 4,227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 நபர்கள் இறந்துள்ளனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை … Read more

கோவையில் மீண்டும் போட்டியிடுவேன்: மநீம தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டம்

கோவை: ‘‘எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்’’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது: “சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக சிறுபிள்ளையை … Read more

“பெரியார் – மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: “தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், “தந்தை பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்” என்று பேசிவிட்டேன். “அழைத்துக் கொண்டு போனார்” என்பதற்கும் “கூட்டிக் கொண்டு போனார்” என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன் என்று பெரியார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்.17 அன்று வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா மற்றும் பவள … Read more

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது: மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: மகளிருக்கான இலவச விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது என்று மாநிலத் திட்டக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தாக்கம் குறித்தும், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.22) தலைமைச் … Read more

Crime In Tamil Nadu | மாணவர்களிடம் 5000 – 20000 ரூபாய் வரை லஞ்சம் பெற்ற பேராசிரியர்

Crime In Tamil Nadu: மாணவர்கள் வேறு துறைக்கு மாறி செல்ல ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக ஜிபே (Gpay) மூலம் பெற்ற பேராசிரியர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அதிமுகவினர் கடிதம்

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கிறீர்களா? இல்லையா? என்பதை கடிதம் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவுவை வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். … Read more