“அன்று தவறாக பேசிவிட்டு இன்று அதானியை பாராட்டும் திமுகவினர்” – அண்ணாமலை

சென்னை: “தமிழகத்தில் அரசியல் எல்லாம் விட்டுவிட்டு சில கட்சிகள், மாநில முன்னேற்றத்துக்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதை இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நமக்கு சொல்லியிருக்கிறது” என்று அதானி குழும முதலீடுகளைச் சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். சென்னையில் ஜன.7 மற்றும் ஜன.8 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடிக்கான 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு – ஜனவரி 12 கிளைமேக்ஸ்!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.  

திடீர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – வடிகால்கள் அமைக்காததால் வேதனையில் செங்கல்பட்டு விவசாயிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பெய்து வரும் மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உர செலவு வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது கனமழை பரவலாக பெய்துவருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம், ஒழலூர், பொன் விளைந்த களத்தூர், மணப்பாக்கம், உதயம்பாக்கம், ஆனூர், கோரப்பட்டு, பொன் பதர் கூடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக விவசாயிகள் நெற்பயிர்களை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 5,000 ஏக்கரில்விவசாயிகள் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.9) கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு,பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு … Read more

ரேஷன் அட்டைகாரர்களுக்கு ஜாக்பாட்… அனைவருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு!

TN Govt Announced Pongal Parisu Thoguppu 2024: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

போக்குவரத்து ஸ்டிரைக் | நீலகிரியில் 60 சதவீத பேருந்துகளே இயக்கம்; படிப்படியாக சேவை குறைவதால் மக்கள் அவதி

உதகை: நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கம் குறைந்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அரசுப் பேருந்துப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உட்பட பிரச்சினை குறித்து, 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. … Read more

கொடநாடு கொலை வழக்கு: தொலைபேசி உரையாடல்கள் ஆய்வு செய்ய வரும் குஜராத் தடய ஆய்வு குழு

கொடநாடு கொலை வழக்குகள் தொடர்பாக தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ய குஜராத் தடய ஆய்வுக்குழு ஜனவரி 25 ஆம் தேதிக்குப் பிறகு திருச்சி வர இருக்கிறது.    

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்; மக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் வழக்கம் போல் பேருந்துகளை இயக்கப்படுகின்றன, மக்கள் எவ்வித சிரமுமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளான 6 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று (ஜன.9) காலை … Read more

“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்” எனக் குறிப்பிட்டு அமைச்சர், அதிகாரிகள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு, ஜன.7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில், நேற்று முன்தினம் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் பரப்பப்படும் போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதேநேரம், செயற்கை நுண்ணறிவு ஏறத்தாழ 100 பேர் செய்யும் வேலையை செய்யும். இதனால் வேலை இழப்பும் நேரிடும். அதேபோல, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஒரு செய்தியை … Read more