ஆசையாய் காதலித்து திருமணம்! மனைவியை கொன்ற கணவர்! அப்புறம் தான் ட்விஸ்டே!

ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலியை கணவனே கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் கசந்தது எதனால்? இந்த கொலைக்கு என்ன தான் காரணம்?   

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற … Read more

ஆவின் ஆரஞ்சு பால் மாதாந்திர அட்டை பெற கட்டுப்பாடு: புதிய விதிகளால் 33 ஆயிரம் அட்டைதாரர்கள் நீக்கம்

சென்னை: விவசாயிகளுக்கு பால் உற்பத்தி இணை தொழிலாக உள்ளது. பருவமழை பொய்த்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அரணாக பால் உற்பத்தி இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற மற்றும் சிறு, குறு விவசாயிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 4.5 சதவீதம் ஆகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை கிராம அளவில் கொள்முதல் செய்ய 9,673 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக … Read more

“மோடி சொன்ன 5 T, பாஜக ஆட்சியில் 5 C” – ‘இந்தியாவுக்காகப் பேசுவோம்’ 2-ம் அத்தியாயத்தில் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு முறைகேடு செய்திருப்பதாக சிஏஐ குறிப்பிட்டுள்ளது என்று தமிழக முத்லவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்காகப் பேசுவோம் அத்தியாயம் 2-ல் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், 2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது: வணக்கம்! இந்தியாவுக்காகப் பேசுவோம் (Speaking for India) பாட்காஸ்ட்டின் முதல் அத்தியாயத்துக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் … Read more

டெல்லியில் பியூஷ் கோயலுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு: அண்ணாமலை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது

சென்னை: அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அண்ணாமலை விவகாரம் மற்றும் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த வாரம் டெல்லி சென்று அமித் ஷாவை நேரில் சந்தித்தார். அதன் பிறகு தமிழகத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து விமர்சிக்க, அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் … Read more

துருக்கியில் இருந்து 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டுவர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ், தனது 2 வயது பெண் குழந்தை சந்தியாவுடன், கடந்த செப்.7-ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நடுவானில் குழந்தை சந்தியாவுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் … Read more

நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 27-ம் தேதி சில இடங்களிலும், 28-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, … Read more