தமிழக செய்திகள்
நெல்லை – சென்னை எழும்பூர், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் உட்பட 9 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்
புதுடெல்லி: நெல்லை – சென்னை எழும்பூர், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் உட்பட நாட்டின் 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். நாட்டின் அதிவேக சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. டெல்லி – வாரணாசி இடையே முதல் … Read more
வந்தே பாரத் ரயிலுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு
திருநெல்வேலி/ சென்னை: வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்த அதே நேரத்தில், இந்த ரயில்கள் இயக்கப்படும் அனைத்து நிலையங்களிலும் கேக் வெட்டியும், இனிப்புகளை பரிமாறியும் தொடக்க விழா உற்சாகமாக நடந்தது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், தெலங்கானா – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், ஞானதிரவியம் எம்.பி., எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் … Read more
அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் பழனிசாமி இன்று அவசர ஆலோசனை – பாஜக உடனான உறவு குறித்து முக்கிய முடிவு
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் உள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. பாஜக தேசிய தலைமையின் அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 14-ம் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சுமார் 20 தொகுதிகளில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிட விருப்பம் … Read more
தினசரி பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு விலை மூன்று ஆண்டுகளில் 50% வரை ஏற்றம்: மளிகை கடை உரிமையாளர்கள் தகவல்
சேலம்: பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்டவைகளின் விலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட தற்போது 40 முதல் 50 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக … Read more
மல்லப்பாடி – மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே பாலம் – 75 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மல்லப்பாடி – மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ளது மல்லப்பாடி ஊராட்சி. மல்லப்பாடி கிராமத்தில் இருந்து மரிமானப்பள்ளி, காவேரி நகர், வி.கே.நகர், நாயுடு கொட்டாய், முஜூநாயுடு கொட்டாய் மற்றும் ஜிட்டிகானூர், முண்டிகானூர், மஸ்திகானூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் பாம்பாற்றினை கடந்து சென்று வர வேண்டிய நிலை … Read more
கோவையில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்: வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு முடிக்க உத்தரவு
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துப் பணிகளும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.24) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், 5வது வார்டு , … Read more
குவைத்தில் உயிரிழந்த கணவரின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்: மனைவி வலியுறுத்தல்
கும்பகோணம்: குவைத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த கணவரின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மாத்தூரைச் சேர்ந்த இவரது மனைவி வலியுறுத்தியுள்ளார். திருவிடைமருதூர் வட்டம், மாத்தூர், அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் முருகேசன்(50). எலக்டிரிஷியனான இவருக்கு சத்யா(40) என்ற மனைவியும், ஹரிஸ்(8), துர்கா(6) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இங்கு போதிய வருமானம் இல்லாததால், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி குவைத் நாட்டுக்கு வேலைக்காகச் சென்றார். ஆனால் அங்கு உரிய … Read more
பழநியை மிரட்டும் காட்டு யானைகள்..! – பயிர்களைக் காக்க போராடும் விவசாயிகள்
பழநி: பழநியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். பழநி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம், தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் இருப்பதால் யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பழநி அருகேயுள்ள … Read more
”வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை தமிழகத்தில் டெபாசிட் வாங்கவிடக்கூடாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
திருப்பூர்: வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார். மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் தொட்டியபாளையத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியானது திமுகவின் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை நிகழ்வில் கட்சியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும், … Read more