‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என போராடி வருகிறோம்: சீமான்

பரமக்குடி: ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதிகாரத்துக்காக போராடி வருகிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரமக்குடியில் தெரிவித்தார். ராமநாதபுரம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ் சமூகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றால் தமிழினம் தாழ்கிறது என்பது எங்களது நோக்கம். தாழ்த்தப்பட்டவர் என்ற … Read more

தவெக-விற்கு சுத்தமாக அரசியல் அனுபவம் இல்லை.. அமைச்சர் துரைமுருகன்!

தவெக-விற்கு அரசியலில் அனுபவம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி போகிற போக்கில் ஏதோ பேசி கொண்டிருக்கிறார் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

“தமிழகத்தில் கால்பதிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி!” – பிருந்தா காரத் கருத்து

திருநெல்வேலி: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்தில் கால்பதிக்க முயல்கின்றன என்று அவர் கூறினார். திருநெல்வேலியில் பாரதியாரின் 104 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டுவிட்டது… ஆ.ராசா கொந்தளிப்பு

தன்னுடைய இயலாமையால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார் என்றும் அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டுவிட்டது என்றும் ஆ. ராசா எம்.பி., கடுமையாக விமர்சித்துள்ளார். 

‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

சென்னை: பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்ச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணி … Read more

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. சொன்னீங்களே செஞ்சீங்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பெட்ரோல், டீசல் விலை குறைப்படும் என சொன்னீங்களே செஞ்சீங்களா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். 

ராமதாஸ் Vs அன்புமணி – யாருக்கு பாமக தொண்டர்களின் ஆதரவு அதிகம்?

அன்புமணி எதிர்பார்க்காத ஒன்று இன்று நடந்துவிட்டது. பாமகவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட அன்புமணியை, அவரின் தந்தை ராமதாஸே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். இனி பாட்டாளிகளின் ஆதரவு யாருக்கு அதிகம் என்ற கேள்வி எழுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில், குறிப்பாக வட தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். 1991 தேர்தல் முதல் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், தனித்து நின்றாலும் பாமகவின் டிராக் ரெக்கார்டு மிக மிக முக்கியமானது. மாறி, மாறி கூட்டணி வைக்கிறார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அதிகளவில் எம்எல்ஏக்களை … Read more

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் எச்சரிக்கை

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை.  

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில் … Read more

TET தீர்ப்பு: ஆசிரியர்களுக்கு நிம்மதி… தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government: TET தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.