திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: ஐபிசி நிறு​வனம் உடனடி​யாக “மில்​லர்” என்ற பெயரைத் திரைப்​படத் தலைப்​பில் இருந்து நீக்க வேண்​டும் என்​று, தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: தமிழீழ விடு​தலைக்​காக தன்​னு​யிரை அர்ப்​பணித்த முதல் கரும்​புலி வீரர் மில்​லர், தமிழீழ வரலாற்​றின் நெஞ்சை நெகிழ​வைக்​கும் மாபெரும் தியாகத்​தின் உரு​வம். அவரின் பெயரை ஐபிசி நிறு​வனம் “மில்​லர்” என்​னும் பெயரில் திரைப்​படம் தயாரிப்​ப​தாகச் செய்​தி​களில் வெளி​யாகி​யுள்​ளது. அவரின் பெயரைப் பொழுது​போக்கு நோக்​கில் … Read more

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை: அரசு உதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​களுக்​கு, பணி மேம்​பாடு ஊதி​யம் மற்​றும் நிலு​வைத் தொகையை உடனடி​யாக வழங்​கு​வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் கல்​லூரி ஆசிரியர்​கள் நேற்று உண்​ணா​விரதம் இருந்தனர். பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (ஏயுடி) மற்​றும் மதுரை காம​ராஜர், மனோன்​மணீ​யம் சுந்​தர​னார், அன்னை தெர​சா, அழகப்பா பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (மூட்​டா) சார்​பில், அரசு உதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​களின் ஒரு​நாள் அடை​யாள உண்​ணா​விரத போராட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. ஏயுடி … Read more

‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய திருமாவளவன் கோரிக்கை

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று கூடுவார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர்வழிபாட்டுக்கும், கும்பல் கலாசாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற வாக்குப் பண்டங்களாகவும் ஆக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக ‘ரோடு ஷோக்கள்’ … Read more

திமுகவின் கட்சி பதிவு அபாயத்தில் இருக்கு… ஹெச். ராஜா திடீர் எச்சரிக்கை – என்ன மேட்டர்?

H Raja: SIR-க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் திமுகவின் கட்சிப் பதிவு அபாயத்தில் உள்ளது என்றும் இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு 

சென்னை: ‘நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் நடை​பெற்ற மோசடி குறித்து தமிழக காவல்​துறை உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்க வேண்​டும்’ என்று டிஜிபி​யிடம் தமிழக பாஜக பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் மனு அளித்​துள்​ளார். அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: 2024-25 மற்​றும் 2025-26-ம் ஆண்​டுக்​கான நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில், காலிப்​பணி​யிடங்​களுக்​காக அதி​காரி​கள் மற்​றும் பணி​யாளர்​களைத் தேர்ந்​தெடுப்​ப​தில் பெரிய அளவி​லான ஊழல்நடந்​திருப்​ப​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்டி உள்​ளது. அந்​தவகை​யில், 2,538 பதவி​களுக்​கான ஆட்​சேர்ப்பு … Read more

சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு: 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

சென்னை: ‘சீருடை பணி​யாளர் தேர்வு வாரிய மதிப்​பெண் அடிப்​படை​யில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்​கப்​படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது. தமிழக காவல் துறை​யில், காவல் பணி​யிடங்​கள் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மற்​றும் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. நேரடி எஸ்.ஐ. பணிக்​கான தேர்வை 1991 முதல் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் நடத்​துகிறது. இதன்​மூலம் தேர்ந்​தெடுக்​கப்​படும் எஸ்​.ஐ.க்​களுக்கு (உதவி ஆய்​வாளர்) காவலர் … Read more

கிருஷ்ணகிரி டூ மதுரை: இன்று 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்!

Tn Weather Update: தமிழகத்தில் இன்று (நவம்பர் 06) மதுரை, திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீர, தீர செயல்​களுக்​கான ‘அண்ணா பதக்​கம்’ ஒவ்​வொரு ஆண்​டும் குடியரசு தின விழா​வின்​போது முதல்​வ​ரால் வழங்​கப்​படு​கிறது. பொது​மக்​களில் மூவருக்​கும், அரசு ஊழியர்​களில் மூவருக்​கும் (சீருடைப் பணி​யாளர்​கள் உட்​பட) இந்த பதக்​கங்​கள் வழங்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர் தமிழகத்தை சேர்ந்​தவர்​களாக இருக்க வேண்​டியது அவசி​யம். வயது வரம்பு கிடை​யாது. அந்​தவகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான ‘வீர தீர செயல்​களுக்​கான அண்ணா பதக்​கம்’ விருதுக்கு பரிந்​துரைகள் வரவேற்​கப்​படு​கின்​றன. இதற்​கான விண்​ணப்​பம் மற்​றும் பரிந்​துரைகள் https://awards.tn.gov.in என்ற … Read more

10% கேளிக்கை வரி கிடையாது.. கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு

Exemption From Entertainment Tax: கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 10% கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” – தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி … Read more