பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: காணொலி வாயிலாக ஏப்.3-ம் தேதி தலைவர்களுடன் ஆலோசனை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக, சமூகநீதிகுறித்து ஏப்.3-ம் தேதி காணொலி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிராகஅனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்டமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை பிப். 2-ம் தேதி … Read more