நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
ஆவடி: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் மாநில சங்கம் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சுகாதார அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில், மொத்தம் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என வெளியாகியது. இதில், பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரம். திருவேற்காடு, பூந்தமல்லி, தென்காசி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, திருவாரூர் திருத்தணி போன்ற நகராட்சிகளின் … Read more