கோவை : பணம் தரல.. நிர்வாணமா வீடியோ எடுத்து பரப்புவோம் – இளம்பெண்ணுக்கு மிரட்டல்.! 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதேபகுதியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் அழகு நிலையத்தில் இருந்த போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் அங்கு வந்தனர். அங்கு அவர்கள் அந்த பெண்கள் இளம்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் பணம் தரவில்லையென்றால் உன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் … Read more

ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை!!

தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அவர் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 23 புதிய அறிவிப்புகளை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சென்னை மற்றும் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்பின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும். தமிழ்நாடு … Read more

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் | மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நிறைவு: தமிழ்நாடு மகளிர் ஆணையம்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவிகளிடம் நடத்திய விசாரணை மற்றும் அவர்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து வரும் திங்கள்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறியும், சம்பந்தப்பட்ட … Read more

நரிக்குறவர் சர்ச்சை: U/A சான்றிதழ்.. ரோகிணி தியேட்டர் விளக்கம்.. பொளக்கும் நெட்டிசன்கள்.!

ரோகிணி தியேட்ட சர்ச்சை கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகின. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிலும் இந்த திரைப்படம் வெளியாகியது. அப்போது, அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக கையில் டிக்கெட்டுகளுடன் சென்ற நரிக்குறவர் குடும்பங்களை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. டிக்கெட் இருந்தாலும் நீங்கள் எல்லாம் உள்ளே செல்லக்கூடாது எனக் கூறி அவர்களை ரோகிணி திரையரங்க நிர்வாகத்தினர் விரட்டினர். அப்போது அங்கிருந்தவர்கள், எதற்காக அவர்களை உள்ளே விட … Read more

குமரியில் வெள்ளை திராட்சை விற்பனை : ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பழவகைகள் விற்பனை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இளநீர், தர்பூசணி விற்பனை அதிக அளவு நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்க இளநீர் நெல்லை, தென்காசி மாவட்டம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு வருகிறது. பச்சை இளநீர் ரூ.30க்கும், சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி பழம் குமரி மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வருகிறது. … Read more

சென்னை மெட்ரோ பேஸ் 2 அப்டேட்: அனைத்து நிலையங்களிலும் திரை கதவுகள் நிறுவ திட்டம்

சென்னை மெட்ரோ பேஸ் 2 அப்டேட்: அனைத்து நிலையங்களிலும் திரை கதவுகள் நிறுவ திட்டம் Source link

காஞ்சிபுரம் மாநகராட்சியில் முன்னறிவிப்பின்றி பட்ஜெட் தாக்கல்.! அதிர்ச்சியில் கவுன்சிலர்கள்.!!

காஞ்சிபுரம் மாநகராட்சியில், கடந்த, 24ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் விபரங்களை, எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லாமல், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகுதான் கவுன்சிலர்களுக்கு அவை பட்ஜெட் விபரம் என்பது தெரியவந்துள்ளது. இதைப்பார்த்து கவுன்சிலர்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். இதில் சில கவுன்சிலர்கள் தங்களது வார்டு புறக்கணிக்கப்படுகிறது, தனி நபர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ளனர்.  அதில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 45 ஆவது … Read more

நாளை முதல் விலையில் மாற்றம்!!

நாளை புதிய நிதியாண்டு தொடங்குவதால் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில், சிகரெட், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு சைக்கிள், பொம்மைகளின் விலைகள் உயருகின்றன. செல்போன்கள், செயற்கை வைரம், உள்நாட்டு பொம்மை, சைக்கிள், டிவி ஆகியவற்றின் விலைகள் குறைகின்றன. இவை இல்லாமல் பல மாற்றங்கள் நாளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, … Read more

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பால் உற்பத்தியாளர் கோரிக்கைகளை நிறைவேற்றி சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும், பல பகுதிகளில் காலம் கடந்து கிடைத்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகள் புதிதல்ல. கடந்த 4 நாட்களாகவே சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க … Read more