போப் ஆண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி..!!

நுரையீரல் தொற்று காரணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெ்றறு வருவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாடிகனின் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறும் போது, போப் பிரான்சிஸ் சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார். அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் முதுமை … Read more

“ஆவின் பால் பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம்” – விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: “ஆவின் பால் விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை உடனடியாக கலைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட … Read more

இளம்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவன்-மாமியார்..! விசாரணையில் அம்பலம்…!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் வரதட்சனை கேட்டு, இளம்பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அமரம்பேடு பகுதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகபிரியா(26) என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. இதையடுத்து லோகபிரியாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கோகுல கண்ணன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் லோகபிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக … Read more

சேலம் வசிஷ்டா நதியின் குறுக்கே புதிய மேம்பாலம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

சென்னை: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் வசிஷ்டா நதியின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டித்தரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தை சேர்ந்த ஶ்ரீராம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “பெத்தநாயக்கன்பாளையம் சின்னமசமுத்திரம் கிராமத்தை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் வசிஷ்டா நதியின் குறுக்கே மேம்பாலம் அமைத்துதர வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த 2021ம் ஆண்டு … Read more

மீண்டும் கட்டாயமாக்கப்படும் மாஸ்க்.?! அமைச்சர் மா.சுப்ரமணியன் முக்கிய அறிவிப்பு.!

நாடு முழுவதும் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது. அந்த வகையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோன பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியம் … Read more

66,130 ஊரக தூய்மைக் காவலர்களுக்கு மாத மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்: விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த … Read more

கலைஞர் ஜெயலலிதாவுக்கு புதுவை அரசு சார்பில் விழா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசுகையில், ‘நாட்டுக்காகவும், மாநிலத்துக்காகவும், மொழிக்காகவும் பாடுபட்டு மறைந்த தலைவர்களுக்கு அரசு விழா எடுக்கப்படும். அதன்படி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட செல்லான் நாயகர் ஆகியோருக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.