விழுப்புரம் ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்தும், அவர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாகவும் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கு … Read more

கோவை சிட்கோ அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் உயிரிழப்பு..!!

கோவை சிட்கோ அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நம்பிக்கை மனதுடன் முயன்றால் முடியாதது இல்லை.. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழிசை பேச்சு

நம்பிக்கை மனதுடன் முயன்றால் முடியாதது இல்லை.. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழிசை பேச்சு Source link

பெண்களின் உள்ளாடைகளுடன் தோன்றும் ஆண் மாடல்கள்..!!

ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான சட்டத்தை மீறியதற்காக, உள்ளாடைகள் அணிந்து பெண் மாடல்கள் விளம்பரங்களில் தோன்றுவதற்கு சீன அரசு தடை விதித்துவிட்டது. இதனால் கிடைக்கும் வருவாயை இழக்க விரும்பாத நிறுவனங்கள் பல, புஷ்-அப் ப்ராக்கள், இறுக்கமான கோர்செட்டுகள் மற்றும் லேஸ் டிரிம் செய்யப்பட்ட நைட் கவுன்கள் உள்ளிட்ட பெண்களின் உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆண் மாடல்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்ளாடை லைவ்ஸ்ட்ரீம் வணிகத்தின் உரிமையாளர் சூ. ஜியுபாய், தனிப்பட்ட முறையில் வேறு வழியில்லை. … Read more

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்வு செயயப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட … Read more

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!

நெல்லை: நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பல்வீர் சிங். இவர் சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் வாயில் ஜல்லி கற்களை போட்டு அடித்து பற்களை பிடுங்குவதாக புகார் எழுந்தது. இவரால் பத்திற்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு வருவாய்த்துறையில் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். … Read more

அரசு ஊழியர்கள் லட்சங்களில் சம்பளம் பெறுகிறார்களா? அமைச்சர் பி.டி.ஆர் பேச்சுக்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு

அரசு ஊழியர்கள் லட்சங்களில் சம்பளம் பெறுகிறார்களா? அமைச்சர் பி.டி.ஆர் பேச்சுக்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு Source link

#கள்ளக்குறிச்சி | ஓடும் பேருந்தில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு – கட்டிட மேஸ்திரி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலை பள்ளி முடிந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பேருந்தில் மாணவியின் இருக்கையின் பின்னால் அமர்ந்திருந்த விளந்தை பகுதியை சேர்ந்த … Read more

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மருந்துகள்..!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் மருந்து மாத்திரைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காரமடை ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சுதாகரிடம் மருந்து எடுத்துவர வாகனம் கேட்கும் போதெல்லாம் தர மறுப்பதால், நகராட்சி ஆணையாளர் வினோத்திடம் அவ்வப்போது வாகனத்தை கேட்டு பெற்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று ஜீப் பழுதாகி இருந்ததால் வேறு வழியில்லாமல் குப்பை அள்ளும் வண்டியை கழுவி சுத்தம் செய்து … Read more

தமிழகத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராமல் 1,407 நிறுவனங்கள் விதிமீறல்

சென்னை: தமிழகத்தில் 1,407 நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்துத் தராமல் அரசு விதியினை மீறி முரண்பாடுகளுடன் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றும் வகையில், 1947-ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவையில் இல்லாத … Read more