டாஸ்மாக் – விபச்சாரம்! நடிகர் பாலாஜி டிவிட்டில், திமுகவின் ராஜிவ்காந்தி பேசிய பழைய வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்!

தனியார் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் சீசன் 4 -ன் வெற்றியாளர் நடிகர் பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடையை மூட சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், திமுக ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்து இரு தினங்களுக்கு முன் டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவரின் அந்த பதிவில், “அன்புள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தயவுசெய்து டாஸ்மாக்கை மூடுங்க. ஆன்லைன் ரம்மியுடன் … Read more

#BREAKING அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. யாரும் போட்டியிட முடியாத வகையில் … Read more

கூடங்குளத்திற்கு சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!

தூத்துக்குடியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, நெல்லை அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 180 ஹைட்ரஜன் சிலிண்டர்களுடன் நெல்லை – நாகர்கோவில் சாலையில் சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கொங்கன்தான் பாறை விலக்கு பகுதியில் சாலை நடுவே கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த பெரும்பாலான சிலிண்டர்கள் சாலையில் சரிந்து விழுந்தன. தீயணைப்புத்துறையினர், சிலிண்டர்கள் மூலம் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க அதன் மீது தண்ணீரை பீச்சி அடித்து குளிர்வித்தனர். இதனை … Read more

போலீஸால் சுடப்பட்டவருக்கான சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம்: கோவை காவல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காவல் துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தாக்கல் செய்யப்பட்ட தெளிவற்ற ஆவணத்துக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை மாநகர காவல் ஆணையர் புதன்கிழமை நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக … Read more

திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் ஆழித்தேரோட்ட விழா வரும் 1ம் தேதி நடைபெறுவதையொட்டி இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 5ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி … Read more

அ.தி.மு.க.வில் திக் திக்.. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு.. நாளை தீர்ப்பு

அ.தி.மு.க.வில் திக் திக்.. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு.. நாளை தீர்ப்பு Source link

"இனி இப்படி பேசமாட்டேன்" – பாஜக நிர்வாகி முன்னாள் ராணுவ கர்னல் பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவை திமுக கவுன்சிலர் படுகொலை செய்ததை கண்டித்தும், பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும், சென்னை சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், “ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சுடத் தெரிந்தவர்கள். நன்றாக வெடிகுண்டு வைக்கத் … Read more

ரூ.40 லஞ்சம் பெற்ற பாஜக எம்.எல்.ஏ அதிரடி கைது!!

கர்நாடகாவில் 40 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக எம்.எல்.ஏவை காவல்துறையினர் கைது செய்தனர். தாவன்கிரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. மாடால் விருபாஷப்பா, மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது மகன் பிரசாந்த் பெங்களூருவில் குடிநீர்-வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றினார். இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய டெண்டர் வழங்கும் விவகாரத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் … Read more

சொத்துத்தகராறு: மகனை ஓட ஓட விரட்டி வெட்டியதாக தாய்- தந்தை கைது..!

தருமபுரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த மகன் சொத்துக்கேட்டு தகராறில் ஈடுபட்டதால், சாலையில் ஓட ஓட விரட்டி தந்தை வெட்டியதாக கூறப்படும் சிசிடிவி பதிவு வெளியான நிலையில், தாய் – தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மூங்கில்பட்டியைச் சேர்ந்த குமரவேல்-கோவிந்தம்மாள் தம்பதியினரின் 2வது மகன் பிரகாஷ், பெற்றோர் சம்மதமின்றி, வேறொரு மதத்தை சேர்ந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததால் குடும்பத்தினர் பேச்சுவார்த்தையின்றி இருந்து வந்துள்ளனர். தனது பங்கிற்கான சொத்தை பிரித்துத்தருமாறு அடிக்கடி கேட்டு வந்த பிரகாஷிடம் ஏற்பட்ட … Read more