“தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா பேசிக்கொள்வார்கள்” – நயினார் நாகேந்திரன் 

திண்டுக்கல்: தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா இருவரும் பேசிக்கொள்வார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும். சொல்வது முக்கியமில்லை … Read more

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா: யார் யாருக்கு என்ன பொறுப்பு?

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, … Read more

தமிழகத்தில் மே 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.29 முதல் மே 2-ம் … Read more

''நமது ஆட்சி சிறுவாணி தண்ணீரை போல சுத்தமானதாக இருக்கும்; ஊழல் இருக்காது'' – கோவையில் விஜய் பேச்சு

கோவை: தவெக-வின் ஆட்சி சிறுவாணி தண்ணீரை போல் சுத்தமான ஆட்சியாக அமையும் என, அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி பட்டறை நிகழ்வு கோவை எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.27) நடந்தது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசியதாவது: பயிற்சி பட்டறை முதல் நாள் நிகழ்வில் நான் பேசும்போது இந்த நிகழ்வு ஓட்டுக்காக மட்டும் நடத்தப்படுவது அல்ல என்று கூறினேன். … Read more

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா – மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்

சென்னை: அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் நாளை (ஏப். 28) மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு முதல்வர், ஆளுநருக்கு பரிந்துரைத்தார். ஆளுநர் இந்தப் பரிந்துரையை அங்கீகரித்துள்ளார். அதோடு, அமைச்சர்களின் இலாகா மாற்றம் மற்றும் … Read more

பொன்முடி, செந்தில் பாலாஜி விடுவிப்பு.. வெளியான புதிய அமைச்சர்களின் லிஸ்ட்!

புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நாளை (ஏப்ரல் 28) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.   

பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்தியர்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம்: கே.கிருஷ்ணசாமி

சென்னை: பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 26 பேர் உயிரிழந்து இன்றோடு ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத இயலாது. 140 கோடி இந்திய மக்கள் மீது … Read more

வெயில் தாக்கம் எதிரொலி – புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

புதுச்சேரி: வெயில் தாக்கம் அதிகரிப்பால் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. சிபிஎஸ்இ விதிப்படி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடந்து வருகிறது. ஏப்.1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஏப்.30ம் தேதி வரை தொடர்ந்து … Read more

விஜய்யை பார்க்க மரக்கிளையில் தொங்கிய நபர்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..

Viral Video Of Fan Falling On Vijay Vehicle At Coimbatore : விஜய், கோவைக்கு பூத் கமிட்டி மாநாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், அவர் ரோட் ஷோ செல்லும் போது அவரை பார்க்க வந்த ஒரு ரசிகர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சென்னையில் சாலை விபத்து உயிர் இழப்பு 14% குறைந்தது – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்

சென்னை: போக்குவரத்து போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, விபத்துக்களைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள், … Read more