காணாமல் போனதாக கூறப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு… கிடுக்கிப்பிடி விசாரணையில் நண்பர்கள் கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்..!

கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போனதாக கூறப்பட்ட கல்லூரி மாணவரை, முன்விரோதம் காரணமாக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கூத்தக்குடி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வியின் மகன் ஜெகன் ஸ்ரீ, தனியார் கல்லூரியில் DME மூன்றாமாண்டு படித்து வந்தார். உடல்நலம் சரியில்லாததால், சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாத ஜெகன் ஸ்ரீ, கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெகன்ஸ்ரீயை தேடி வந்த போலீசார், … Read more

தென்னக ரயில்வேயின் 10 நாள் ஆன்மீக சுற்றுலா திட்டம் – மே 4ம் தேதி ரயில் புறப்படுகிறது

கும்பகோணம்: கேரளாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக புரி, கோனார்க், காசி, அயோத்தி, கொல்கத்தா என பல்வேறு ஆன்மிக தலங்களுக்குச் செல்வதற்கான சிறப்பு ரயில் சேவை குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகக் காசிக்கு ஆன்மிக ரயில் இயக்க வேண்டும் என கும்பகோணம் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், தென்னக ரயில்வே துறைக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் பாரத் கவுரவ் என்ற புண்ணிய … Read more

கீழடி அருகே திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் கிழக்கு பகுதியில் நேற்று குழி தோண்டப்பட்டது. அப்போது, பழங்கால உறைகிணறு போன்ற அமைப்பு தென்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இடத்தை பார்வையிட்ட வருவாய்த்துறையினர், யாரும் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக முள் வைத்து மூடினர். இந்த உறைகிணறு குறித்து கீழடியில் உள்ள தொல்லியல் துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடிக்கு அருகில் உள்ள பகுதி என்பதால், திருப்பாச்சேத்தியிலும் பழங்கால தமிழர் நாகரிகம் … Read more

முஸ்லிம் இடஒதுக்கீடு: காங்கிரஸின் திருப்திபடுத்தும் அரசியலால் வழங்கப்பட்டது – அமித்ஷா

முஸ்லிம் இடஒதுக்கீடு: காங்கிரஸின் திருப்திபடுத்தும் அரசியலால் வழங்கப்பட்டது – அமித்ஷா Source link

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் முன்னாள் கார் ஓட்டுநர் கைது! வெளியான அதிர்ச்சி காரணம்!

பணமோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முன்னாள் கார் ஓட்டுநர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை : ஒண்டிப்புதூர் பட்டிணத்தை சேர்ந்தவர் சுதாகரன். கடந்த 2018 ஆம் ஆண்டு, சேலம் மணியனூரை சேர்ந்த தேன்மொழி என்பவரிடம் இவர்  அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார். இதேபோல் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி மேலும் 10 பேரிடம் , சுமார் 37 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியுள்ளார். மேலும், … Read more

அதிமுக – பாஜக இடைய சுமூக உறவு நீடித்துக்கொண்டிருக்கிறது: மத்திய அமைச்சர் எல்.முருகன்

மதுரை: அதிமுக – பாஜக இடையேயான உறவு சுமூகமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் இன்று ஒளிபரப்பானது. பிரதமரின் வானொலி உரையை கேட்பதற்காக மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2014-லிருந்து அகில இந்திய வானொலியின் “மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் … Read more

பாஜவில் இருந்து விலகி பேரூராட்சி தலைவி திமுகவில் இணைந்தார்

தென்தாமரைகுளம்:  குமரி மாவட்டம் கொட்டாரத்தில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க  கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா  நேற்று நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்  பாபு தலைமை வகித்தார்.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்  மேயர் மகேஷ் ,திமுக மாநில அமைப்பு துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து  கொண்டனர். இதில் பா.ஜ.வை  சேர்ந்த  தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப்  ,கொட்டாரம் பேரூராட்சி சுயேச்சை உறுப்பினர் செல்வக்கனி,  … Read more

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: மீண்டும் பட்டம் வென்ற நிகத் ஜரீன் உற்சாக கொண்டாட்டம்

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: மீண்டும் பட்டம் வென்ற நிகத் ஜரீன் உற்சாக கொண்டாட்டம் Source link

#நெல்லை | விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ்! விசாரணைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்!

நெல்லை, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பல்லை புடுங்கியதாக புகார் எழுந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை : கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட மூவரில் ஒரு இளைஞரை, போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேயர் கொண்டு பற்களை அகற்றியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொடூர போலீஸ் அதிகாரி … Read more

தமிழக ஆளுநருக்கும் அரசுக்குமான மோதலில் கருத்து இல்லை – தமிழிசை சௌவுந்தரராஜன்

தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லையென தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, கச்சத் தீவில், இலங்கை கடற்படை சார்பில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, வழிபாட்டுத்தலங்களால் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வதே எந்த அரசுக்கும் நல்லதாக இருக்குமென தெரிவித்தார்.   Source link