#BREAKING | குரூப் 4 தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வை ஒரே நடுவத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்று இருக்கும் சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்படும் என்று, டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட  டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில்  ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 … Read more

4 வயது மூத்த நடிகையுடன் திருமணம்… பிரபல நடிகர் பதிலடி!!

பசங்க கிஷோர் தன்னைவிட 4 வயது மூத்த சீரியல் நடிகையை திருமணம் செய்தது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். 2009ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான பசங்க திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர், தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில், கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை ப்ரீத்தி … Read more

ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் சீர்கொண்டு வந்து சிறப்பித்தனர். ஆலங்குடி தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 6 மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து பங்குத்தந்தை தலைமையில் கிறிஸ்தவர்களும், பெரிய பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியர்களும் தட்டு சீர்வரிசையுடன் கோயிலுக்கு வருகை … Read more

தமிழகத்தில் பூஜ்யம் நிலை நோக்கி இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் H3N2 என்கிற இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத நிலை நோக்கி அதாவது பூஜ்யம் என்கிற நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஞாயிறன்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு … Read more

ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம். தமிழரின் தொன்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் இந்த அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அருங்காட்சியத்தை பார்வையிட வருகை தரும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி உள்நாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு – ரூ.15, சிறியவர்களுக்கு- ரூ.10, மாணவர்களுக்கு … Read more

5369 பணியிடங்கள்: குரூப் 4 மாதிரி குறைந்த கல்வித் தகுதி போதும்; உடனே ட்ரை பண்ணுங்க!

5369 பணியிடங்கள்: குரூப் 4 மாதிரி குறைந்த கல்வித் தகுதி போதும்; உடனே ட்ரை பண்ணுங்க! Source link

தேனி : கும்பக்கரை அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. 30 சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிப்பு.!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று வார விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த … Read more

சோகம்! ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மெய்வழிச்சாலை கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் சாலை சக்கரபாணி என்பவருக்கு சொந்தமான 21 வயது ராமு என்கிற ஜல்லிக்கட்டுக்காளை உயிரிழந்தது. காளையை குடும்பத்தில் ஒருவனாக பாவித்து தமிழ்நாட்டில் வளர்த்து வருவது வழக்கம். அதே போல், சாலை சக்கரபாணியும், அவரது மகன் சாலை கனகராஜூம் வளர்த்து வந்தனர். இந்த காலை, 2008 முதல் 2019 வரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான … Read more

ஜே.சி.பி ஐ கொண்டு எம் சாண்ட், ரெட்டி மிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைப்பாதையில் குழிதோண்டி போராட்டம் நடத்திய பொதுமக்கள்..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சென்னை பசுமை தீர்ப்பாயம் மூட உத்தரவிட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக எம்.சாண்ட் ரெடி மிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவுப்பாதையில் ஜேசிபியை கொண்டு பள்ளம் தோண்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பிரம்மபுரம் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படும் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து பகல் நேரங்களில் வெண்மை நிறத்தில் புகையும், இரவு நேரங்களில் கருமை நிறத்தில் ரசாயன புகையும் வெளியேறிறுவதுடன், அதிக சத்தமும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் … Read more

இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: எல். முருகன்

மதுரை: இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”பேராசிரியர் பரமசிவனின் 25வது ஆண்டு நினைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். அவரது நினைவாக வாரந்தோறும் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. சவுராஷ்ட்ரா தமிழ் சங்கம் சார்பில், மதுரைக்கும் சோமநாத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து குஜராத் … Read more