மோடியை விமர்சித்த பழைய ட்வீட்டை கையில் எடுத்த காங்கிரஸ்; டெலிட் செய்ய மாட்டேன் என குஷ்பு உறுதி

மோடியை விமர்சித்த பழைய ட்வீட்டை கையில் எடுத்த காங்கிரஸ்; டெலிட் செய்ய மாட்டேன் என குஷ்பு உறுதி Source link

அதற்குள் அடுத்த பலி! தமிழகத்தில் தொடரும் சோகம்! சிக்கிய தற்கொலை கடிதம்!

திருச்சி அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் 47 பேர் பலியாகிய நிலையில், தற்போது 48வதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையின் படி, அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் … Read more

விவேகானந்தரின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகளில் பாடங்களாக வைக்க வேண்டும்: பொன்னம்பல அடிகளார் பேச்சு

சென்னை: ராமகிருஷ்ண மடத்தால் 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கொல்கத்தா ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூற்றாண்டு நிறைவு விழாவில், குருதேவர்மற்றும் தூய அன்னையின் தீர்த்த … Read more

தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி: தமிழ்நாடு கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க நெல்லை உதவி பொதுமேலாளராக பணி புரிந்தவர் ரெங்கநாததுரை. இவர் சில மாதங்கள் நெல்லை ஆவின் பொதுமேலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஆவின் பால் கூட்டுறவு சங்க உதவி பொதுமேலாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். அவர் வருகிற 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் திடீரென சஸ்பெண்ட் செய்து, ஆவின் நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு … Read more

புதுவை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் கொள்ளை: தமிழகத்தில் பதுங்கி இருந்த கும்பல் கைது

புதுவை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் கொள்ளை: தமிழகத்தில் பதுங்கி இருந்த கும்பல் கைது Source link

“தமிழகத்தில் இன்புளுயன்சா பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொருத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது XBB BA4 எனப்படும் உருமாறிய ஒமிகிரான் பாதிப்பு அதிகளவில் உள்ளது என்றும், தமிழகத்தில் நாளொன்றுக்கு 80 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.  Source link

கல்விக் கொள்கையை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும்: அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பங்கேற்று பேசியதாவது: மத்திய அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கெல்லாம் பொதுத்தேர்வை நடத்தச் சொல்கிறது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். இந்திய மாநிலங்கள் மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டுள்ளன. அதனால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற கல்விக் … Read more

அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்

நெல்லை:அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று நெல்லையில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி’  குஜராத்தில் வரும் ஏப்.17ல் தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பான சிறப்பு அழைப்பு நிகழ்ச்சி, நெல்லையில் நடந்தது. இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் பங்கேற்று பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி போல, தற்போது … Read more

#நாகர்கோயில் : சார்.. சார்.. லிஃப்ட்.. பிளீஸ்.." உதவி செய்ய போனவருக்கு நேர்ந்த மோசமான சம்பவம்.!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காரில் லிஃப்ட் கேட்பது போல் ஏறி தனியார் நிறுவன மேலாளரிடம் நகை மற்றும் பணம் பரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சார்ந்தவர் சந்தோஷ் கோசி. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் இவர் பூதப்பாண்டிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் நின்று கொண்டிருந்த ஆசிப் என்பவர் இவரது காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். சந்தோஷ் … Read more

உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய குப்பை: சுகாதாரக் கேடு ஏற்படுவதாக மக்கள் புகார்

உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தொட்டி திறந்த நிலையில் இருப்பதாலும், அருகிலேயே குப்பை கொட்டப்படுவதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. உடுமலை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தரை தளத்தை ஒட்டிய குடிநீர் தொட்டியில் சேகரமாகும் குடிநீர், மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு ஏற்றப்பட்டு பின் குழாய்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது. தரையில் உள்ள … Read more