கடலூர் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 2 பேர் மீட்பு

கடலூர்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில், அங்கு இருந்த 33 பெண்கள் உள்பட 142 பேர் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள காப்பகங்களின் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் கடலூர் வன்னியர்பாளையம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திருவள்ளூரை சேர்ந்த சேதுராமன், கிருஷ்ணகிரியை சேர்ந்த அஸ்லாம், கொல்கத்தாவை சேர்ந்த சோனா மகதூர், கேரளாவை சேர்ந்த பிஸ்மில்லா, திருநெல்வேலியை சேர்ந்த மனோஜ் ஆகிய 5 பேர் கடந்த … Read more

முழுக்க இலவசம்… உங்க மொபைலில் எஸ்.பி.ஐ-ன் 10 சேவைகள்: எப்படின்னு பாருங்க!

முழுக்க இலவசம்… உங்க மொபைலில் எஸ்.பி.ஐ-ன் 10 சேவைகள்: எப்படின்னு பாருங்க! Source link

அடிக்கடி தகராறு.. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.. ராணிப்பேட்டையில் சோகம்.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (50). இவருடைய மனைவி ராதா. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ஏரி பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த … Read more

பனிப்புயலால் 1.2 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு…!

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் வீசி வரும் பனிப்புயலால் அம்மாகாணம் நிலைகுலைந்துள்ளது. அதோடு அங்கு வீசி வரும் பனிபுயலால் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாயுவதும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் உள்ளது. இதனால் 1.2 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு இன்றி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது வெள்ளத்தினால் மரங்கள் சாய்வது போன்ற … Read more

பொதுச்செயலர் தேர்தலை எதிர்த்த வழக்கு – ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, ஏற்கெனவே இபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், … Read more

மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு

குன்னூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டுக்குட்பட்ட பகுதியில் அண்ணா நகர் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதிக்கு செல்லும் பாதையானது கொடநாடு எஸ்டேட் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், பொதுமக்கள் சென்று வர கடும் கட்டுப்பாடுகள் இன்று வரை இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக எஸ்டேட் தரப்புக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வழி சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது.  இதுதொடர்பாக, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  கடந்த 20.9.2007ம் ஆண்டு  … Read more

SBI News: ஒரு மிஸ்டு கால் போதும் தெரியுமா? பேங்க் அக்கவுண்ட் செக் பண்றது ரொம்ப ஈசி!

SBI News: ஒரு மிஸ்டு கால் போதும் தெரியுமா? பேங்க் அக்கவுண்ட் செக் பண்றது ரொம்ப ஈசி! Source link

காய்கறிக்குள் மறைத்து குட்கா கடத்தல் – 2 பெண்கள் கைது

கர்நாடகாவில் இருந்து காய்கறிக்குள் மறைத்து வைத்து குட்கா கடத்தி வந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் குட்கா கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கர்நாடகா பேருந்திலிருந்து காய்கறி மூட்டையுடன் இறங்கிய இரண்டு பெண்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். இதையடுத்து காய்கறி மூட்டையை திறந்து பார்த்ததில் 180 குட்கா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு பெண்களிடம் … Read more

உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் அஞ்சலி…!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது. இதனால் இப்போர் நின்று விடாமல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. ஆனால் இதனை ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் முன்னேறி செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் … Read more

“மின் வாரியத்தில் கூலித் தொழிலாளர் நியமனத்தை கைவிடுக; 56,000 காலிப் பணியிடங்களை நிரப்புக” – திருமாவளவன்

சென்னை: “மின் வாரியத்தில் கூலித் தொழிலாளர் நியமனத்தை கைவிடுக; காலிப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களை நியமித்திட வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஆண்டுக் கணக்கில் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்து தற்போது வரை, வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் போராட்டங்களை மின்வாரிய தொழிற்சங்கங்கள் நடத்திய … Read more