வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் அழைப்பு

சென்னை: வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (மார்ச் 22) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தக் … Read more

ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் நள்ளிரவு வரை நடைபெற்ற லஞ்ச  ஒழிப்பு போலீஸ் ரெய்டில், பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது செய்த முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், 2016ல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றினார். அப்போது அங்குள்ள நகராட்சி பள்ளிகளில் கழிப்பிடங்கள்  கட்டியது, கொசு மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்நது. இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு  பிரிவு … Read more

காஞ்சிபுரத்தில் பயங்கரம்: வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை.! தந்தை-மகனுக்கு வலைவீச்சு.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (23). இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பரான குணா என்பவரும் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்து குணாவின் தந்தை, தமிழ்வாணனை கண்டித்துள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குணா மற்றும் … Read more

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து | பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு; காயம் 16

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே புதன்கிழமை காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 16 பேருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த இருபதுஆண்டுகளாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை … Read more

ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி அனிதா (38). குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 2 மகன்கள் உள்ளனர். சதாசிவம் திருப்பத்தூர் பகுதியில் மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த அனிதா நேற்று அதிகாலை ரயில் முன்  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கை எதிர்கொள்வது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன?

டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கை எதிர்கொள்வது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? Source link

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி – ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சன் (31) என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 6 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழக சட்டப்பேரவையில் நாளை மீண்டும் தாக்கல்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா நாளை (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அக். … Read more

பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி

சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே வெள்ளாளபுரம், முனியம்பட்டி சன்னியாசிகடையைச் சேர்ந்தவர் குமார் (40). இவர் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றி கொண்டிருந்த அமுதா (45) பரிதாபமாக உயிரிழந்தார். வேடப்பன் (75) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.