45ஆண்டுக்கு முன் பாடம் எடுத்த ஆசிரியரை சந்தித்த மலேசிய மாநில துணை முதல்வர்!

சிறு வயதில் தனக்கு குர்ஆன் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை தற்போது அவர் வீட்டுக்கே வந்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார், மலேசியா நாட்டின் சரவாக் மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா. 45 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் தனக்கு குர்ஆன் சொல்லிக் கொடுத்து தற்போது பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள ஆசிரியர் அப்துல் லத்தீப் அவர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், மலேசிய நாட்டின் சரவாக் மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா. மலேசிய நாட்டில் சரவாக் மாநிலத்தின் துணை முதல்வராக … Read more

அனிதா பெயரை சூட்டினால் நீட் பிரச்னை முடிந்துவிடுமா? தி.மு.க.வுக்கு பிரேமலதா கேள்வி

அனிதா பெயரை சூட்டினால் நீட் பிரச்னை முடிந்துவிடுமா? தி.மு.க.வுக்கு பிரேமலதா கேள்வி Source link

#தமிழகம்! காதலை ஏற்க மறுத்த மகள் உறவுமுறை இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர்! அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை அருகே இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மகள் உறவுமுறை உடைய இளம் பெண்ணை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், காதலை ஏற்க இளம் பெண் மறுத்ததால், அவரை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை, தந்தை முறை உள்ள துரைக்கண்ணு என்ற இளைஞர் ஒருதலையாக … Read more

சிவகங்கையில் அதிர்ச்சி!! ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி..

சிவங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு யாழினி என்ற மீனாட்சி (10) என்ற மகள் உள்ளார். அதேபோல் நாகராஜனின் தம்பி லட்சுமணன் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். லட்சுமணன் மனைவி தனம். இந்த தம்பதிக்கு மகேந்திரன் (7), சந்தோஷ் (5) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பள்ளி விடுமுறை தினமான இன்று யாழினி, மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய மூன்று பெரும் சேர்ந்து … Read more

“சாதி, இனம், மதத்துக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக வாழவேண்டும்” – சாமித்தோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நாகர்கோவில்: “மனிதனுக்குள் நிலவிய ஏற்றத்தாழ்வு நிலைகளை அய்யா வைகுண்டர் சாமிக்குள் இருந்த இறைசக்தியால் மாற்ற முடிந்தது” என சாமித்தோப்பில் வழிபாடு செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு வந்தார். அவரை பதி நிர்வாகம் சார்பில் குரு பால ஜனாதிபதி வரவேற்றார். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அய்யாவழி பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை கட்டப்பட்டு, திருநாமம் இடப்பட்டது. பின்னர் வடக்கு வாசலில் அய்யா வைகுண்டசாமி … Read more

Paedophile: சர்வதேச கும்பலுக்கு சிறுமியின் ஆபாச படம் சப்ளை; மர்மம் உடைத்த சிபிஐ.!

குழந்தைகளிடத்தில் மட்டுமே பாலியல் இச்சை கொள்ளுவதை பீடோபைல் (Paedophile) என சர்வதேச சமூகம் வரையறுத்துள்ளது. இந்த பிரிவினரில் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் அடக்கம். இவர்களுக்கு குழந்தைகள் மற்றும் சிறார்கள் மீது மட்டும் பாலியல் ஆசை ஏற்படும். குழந்தைகள் மீது பாலியல் செயல்களை நிகழ்த்தினால் அதற்கு மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளது. அதனால் பீடோபைல் பிரிவினர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பாலியல் சுற்றுலா (The child sex tourism … Read more

ஆஸ்கர் விருது ஆவணப்பட நாயகனிடம் தாயை பிரிந்து தவித்த தர்மபுரி யானைக்குட்டி ஒப்படைப்பு

ஊட்டி: தர்மபுரியில் தாயை பிரிந்து தவித்த யானைக்குட்டியை வனத்துறை அதிகாரிகள், ஆஸ்கர் விருது ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 11ம் தேதி தாயை பிரிந்து வனத்தை விட்டு வெளியேறிய சுமார் 1 வயதுடைய ஆண் யானை குட்டி, பென்னாகரம் அருகே நீர்குந்தி பகுதியில் உள்ள விளைநிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் குட்டி யானையை கயிறு கட்டி … Read more

நடு ரோட்டில் மதுபோதையில் ரகளை – 3 பெண்கள்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட 3 பெண்கள் மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மது அருந்திவிட்டு அங்கு சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று … Read more

கருணாநிதி பாதுகாவலருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு.. ஐ. பெரியசாமி விடுவிப்பு

கருணாநிதி பாதுகாவலருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு.. ஐ. பெரியசாமி விடுவிப்பு Source link

அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்த திட்டமா? சற்றுமுன் பரபரப்பு பேட்டி!

வரும் 28ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாக, சென்னையில் காவல் ஆணையரை சந்தித்தபின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். மேலும், காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன்; இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு  கொடுத்துள்ளது” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே புகுந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி … Read more