சேலம் அருகே பரிதாபம்.! மின்னல் தாக்கி விவசாயி பலி.!
சேலம் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் நேற்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் கருமந்துறை பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி குழந்தையன் (40), அப்பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே குழந்தையன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். … Read more