பெண்களுக்கு தனி பட்ஜெட்: எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை – அமைச்சர் கீதா ஜீவன் பதில்!

பெண்களுக்கு தனி பட்ஜெட் என்பது பூர்வாங்க பணியில் உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும் அதை மேம்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சாலைகளை மேம்படுத்த 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதல் கட்டமாக 90 கோடியில் … Read more

பாண்டிச்சேரி பல்கலை. முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பம் ஆரம்பம்; ஏப்.19 கடைசி தேதி

பாண்டிச்சேரி பல்கலை. முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பம் ஆரம்பம்; ஏப்.19 கடைசி தேதி Source link

ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா!

மீண்டும் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து சுமார் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் பணத்தை இழந்த விரக்தியில் சிலர் கொலை, கொள்ளை, வழிப்பறி, கையாடல் உள்ளிட்ட குற்ற செயல்களிலும் இறங்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே பாமக குரல் கொடுத்து போராட்டம் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் … Read more

“உப்பு சப்பு இல்லாத வழக்கு…” – கார்த்தி சிதம்பரம் விளாசல்!!

ராகுல் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், உப்பு சப்பு இல்லாத இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறியுள்ளார். கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். … Read more

மக்கள் பணம் பல ஆயிரம் கோடியை மோசடி செய்த IFS நிதி நிறுவனம்.. துபாயில் சுற்றித் திரியும் நிறுவன இயக்குநர்..!

வேலூர் IFS நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதன் இயக்குநர்களில் ஒருவரான மோகன்பாபு வெளிநாட்டில் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குநர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வட்டி தருவதாகக் கூறி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் IFS நிதி நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது. இந்த வழக்கில் அந்நிறுவன இயக்குநர்களான லட்சுமி நாராயணன், … Read more

“ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது பாஜகவின் கோழைத்தன செயல்” – ஜவாஹிருல்லா

சென்னை: “ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டது பாஜகவின் கோழைத்தனமான செயல்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனை விதித்த உடனேயை ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து … Read more

மாதந்தோறும் 'கமிஷன்'.. செந்தில்பாலாஜி 'கண்டிஷன்'.. டாஸ்மாக் ஊழியர் அம்பலம்..!

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகம். அதே போல அரசு துறைகளில் அதிகம் மற்றும் நிலையான வருவாயை ஈட்டி கொடுத்து வரும் துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது. ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் மது விலை உயர்வு, கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை போன்ற குற்றசாட்டுகள் ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்கிறது. விலையை ஏற்றினாலும் மற்ற மாநிலங்களை போல தரமான மது கிடைப்பதில்லை என்றும் சொல்கின்றனர். குறிப்பாக இந்த ஆட்சியில் … Read more

குமரி முதல் காஷ்மீர் வரை மக்களின் பேராதரவினை பெற்றவர் ராகுல்காந்தி: KS.அழகிரி

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.ஆகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2019 ஏப்ரல் 13 ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது பொதுவாக கூறப்பட்ட ஒரு கருத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கில் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது. கோலார் பொதுக் கூட்டத்தில் பேசியதற்கு சூரத் … Read more

காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர்: காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு விருதுநகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. கணவர் செல்லப்பாண்டியை கொலை செய்த மனைவி செல்விக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிடும் அதிமுக? – பேரவையில் கே.பி.முனுசாமி பேசியது என்ன?

‘அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அடித்துக் கொண்டிருந்தால் தான், நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்’ என கே.பி. முனுசாமி ஆவேசமாக பேசியுள்ளார். நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 56 வாக்குறுதிகளில் விவசாயிகளுக்காக இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் நிதிநிலை அறிக்கையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதாக கூறினார். தி.மு.க. வாக்குறுதியில் இடம்பெற்ற நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ஆயிரம் ரூபாயும் … Read more