ஜிபிஎஸ் வரைபடம் உதவியுடன் தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்களை தெரிவு செய்ய நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஜிபிஎஸ் வரைபடம் உதவியுடன் தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்களை தெரிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் பேரூராட்சியில் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? முதல்வர் மு.க. ஸ்டாலின்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு, ஆலங்குளம் வட்டம், குத்தப்பாஞ்சன் … Read more