ரஜினி வீட்டிலும் கைவரிசையா? விசாரணை வளையத்தில் ஈஸ்வரி, வெளிவரும் பகீர் தகவல்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் நகைகள் திருடப்பட்ட சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, சந்தேக நபர்கள் பற்றிய தகவலும் அவர்களிடம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறை சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றது. இதில் ஈஸ்வரி என்பவரின் பெயர் வெகுவாக அடிபட்டு, அவரைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி. அங்கமுத்து பெரிதாக எந்த வேலைக்கும் … Read more

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி: பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரி பொதுத்தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் துரை ரவிசந்திரன் அறிவித்தார். தமிழ்க்கடவுள் முருக பெருமானை மனதில் நினைத்து வழிபடும் தினமே பங்குனி உத்திரமாகும். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் இணையும் நாளில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடாப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், … Read more

100 % இந்தி மொழி விவகாரம்: சுற்றறிக்கையை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

மத்திய அரசு அலுவலகங்களில் நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். தனது கோரிக்கையில் அவர், “தென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்ட சுற்றறிக்கையில் உடல் நலம் பற்றிய வழிகாட்டி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டத்தில் 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக அந்த சுற்றறிக்கை கூறுகிறது. உடல் … Read more

மீனம்பாக்கம் மெட்ரோ பார்க்கிங் வசதி மூடல்: புதுப்பிக்கும் பணி தொடக்கம்

மீனம்பாக்கம் மெட்ரோ பார்க்கிங் வசதி மூடல்: புதுப்பிக்கும் பணி தொடக்கம் Source link

சமூக வலைதளங்களில் அவதூறு… விஷம் குடித்த பாஜக இளைஞரணி தலைவர்.! ராமநாதபுரத்தில் பரபரப்பு..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்பியதால் போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் பகுதியை சேர்ந்தவர் போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் பிரபா கார்த்திகேயன்(34). இவர், செவ்வூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன்(28) என்பவரிடம் பாஜகவில் இளைஞரணி நிர்வாகி பதவிக்கு பணம் கேட்டதாக பாஜக நிர்வாகிகள் சமூக வலை தளங்களில் தகவல் பரப்பியுள்ளனர். மேலும் கட்சி நிர்வாகிகள் … Read more

நகை திருட்டு தொடர்பாக மேலும் ஒருவர் கைது: ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பணிப் பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டுவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் … Read more

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் அமைச்சர்களுக்கும் டீலிங்: கொளுத்தி போட்ட அண்ணாமலை

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மதுரை மாநகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்றைய தினம் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் … Read more

ஆருத்ரா நிதிநிறுவன மோசடி: பாஜக மாநில நிர்வாகி உட்பட 2 பேர் கைது

சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா நிதி நிறுவனம் என்ற பெயரில் கோல்டு டிரேடிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் பல கிளைகள் அமைத்து 10 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். இதனை நம்பிய மக்கள் பலர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட தேதியில் முதிர்வு தொகையை அந்நிறுவனம் பொதுமக்களுக்கு திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு புகார் சென்றதன் அடிப்படையில் பொருளாதார … Read more

பரமத்திவேலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குண்ணமலை கிராம நிர்வாக அலுவலர் நவீனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஏஓ நவீனா மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியதால் போலீசார், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த நகைக்கடை உரிமையாளர்? 1.4 கிலோ தங்கம் மீட்பு!

திருவள்ளூரில் கடந்த 20 ஆம் தேதி நகை வியாபாரியிடம் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மற்றொரு நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடம் இருந்து 1.4 கிலோ தங்கததை மீட்ஷடுள்ளனர். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ராமேஸ்வர லால் என்பரிடம் வேலை பார்க்கும் காலுராம் (35) மற்றும் சோகன் (30), கடந்த 20 ஆம் தேதி தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையொன்றில் நகைகளை கொடுத்து பணம் வசூலித்து விட்டு … Read more