சென்னை விமான நிலையத்தில் கிடந்த கருப்பு நிற பை.! வெடிகுண்டு இருக்குமோ? பீதியில் அதிகாரிகள்.!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளுக்கும், உள் நாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த விமான நிலையத்தில், தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில், உள்நாட்டு முனையத்திற்கு வரும் பகுதியில் கருப்பு நிற பை ஒன்று டிராலியில் கிடந்தது.  இந்த பையை கண்காணிப்பு கேமராவில் பார்த்த மத்திய … Read more

ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை..!!

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தனி நீதிபதி குமரேஷ்பாபு நேற்று முன்தினம் நிராகரித்து தீர்ப்பளித்தார். உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஓ.பி.எஸ். தரப்பு மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் முறையீடு செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை நேற்று (மார்ச் 29) விசாரிப்பதாக தெரிவித்தனர். … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர். … Read more

புதுச்சேரியில் இருந்து சென்னை கோவைக்கு விமான சேவை: கவர்னர் தமிழிசை தகவல்

தூத்துக்குடி: புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி:  காரைக்கால் முதல் இலங்கை வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. அடுத்தகட்டமாக புதுச்சேரியில் இருந்து கோவை மற்றும் சென்னைக்கு 20 பேர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமான போக்குவரத்து வர இருக்கிறது. புதுச்சேரியில் … Read more

ஈரோடு அருகே சோகம்… தந்தை கண்முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி..!

ஈரோடு மாவட்டத்தில் தந்தை கண் முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் புவனேஷ் (17) தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்கு வந்திருந்த புவனேஷ், கடந்த மூன்று நாட்களாக தந்தையுடன் சோலார் அருகே பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் … Read more

திருச்சி மாநகரத்தில் மெட்ரோ ரயிலுக்கு இணையாக புதிய போக்குவரத்து திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு

திருச்சி மாநகரத்தில் மெட்ரோ ரயிலுக்கு இணையாக புதிய போக்குவரத்து திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு Source link

கோவையில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை..!!

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம் அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி கரையம்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (61). இவரது மனைவி தங்கமணி (54). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சுப்பிரமணியும், தங்கமணி யும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், சுப்பிரமணி நேற்று காலை சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீடு திறந்து … Read more

நிலத்தடி நீர் வளத்தை ஒழுங்குபடுத்த விரைவில் தமிழ்நாடு நீர்வள ஆணைய சட்டம்

சென்னை: நிலத்தடி நீர்வளத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும், தமிழ்நாடு நீர்வள ஆணைய சட்டம், நீர்வளக் கொள்கை ஆகியவை தயாரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தொிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீளவளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு: தமிழகத்தில் நிலத்தடி நீர் வளங்களை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் தமிழக அரசு கடந்த 2003 மார்ச் மாதம், தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டத்தை இயற்றியது. நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இச்சட்டம் 2013-ம் ஆண்டு … Read more

தமிழக SETC பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை..! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை குறித்த பல்வேறு அறிவிப்புகளையும் விளக்கங்களையும் கொடுத்தார். அவர் பேசும்போது, கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளனர். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் ரூ.1,500 வரை சேமிப்பு கிடைத்துள்ளது என விளக்கம் அளித்தார்.  அப்போது அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு … Read more

10ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுத கூடுதல் கால அவகாசம்: தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

சேலம்: தமிழகத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த நாளை (31ம்தேதி) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகிறது. இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகளை, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடத்திக் கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த இரு வாரமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு … Read more