மகளிர் மதிப்புத் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்
புதுச்சேரி: மகிளா சம்மான் திட்டத்தை மகளிர் மதிப்பு திட்டம் என மொழிபெயர்த்து தமிழக, புதுச்சேரி பெண்களிடம் கொண்டு செல்ல அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை ஊக்குவிக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக சேமிப்பு கணக்கை பெற்றோர்கள், பாதுகாவலர் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 59 ஆயிரத்து 690 சேமிப்பு கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் … Read more