ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி அனிதா (38). குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 2 மகன்கள் உள்ளனர். சதாசிவம் திருப்பத்தூர் பகுதியில் மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த அனிதா நேற்று அதிகாலை ரயில் முன்  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கை எதிர்கொள்வது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன?

டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கை எதிர்கொள்வது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? Source link

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி – ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சன் (31) என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 6 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழக சட்டப்பேரவையில் நாளை மீண்டும் தாக்கல்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா நாளை (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அக். … Read more

பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி

சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே வெள்ளாளபுரம், முனியம்பட்டி சன்னியாசிகடையைச் சேர்ந்தவர் குமார் (40). இவர் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றி கொண்டிருந்த அமுதா (45) பரிதாபமாக உயிரிழந்தார். வேடப்பன் (75) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

திருப்பத்தூரில் பரபரப்பு – ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்துள்ளனர். அப்போது அங்கு பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பித்த்துச் சென்றனர்.  ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் … Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 9 ஆக அதிகரிப்பு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களில் 7 பேரின் பெயர் – விவரங்கள் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் நரேன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் சுமார் 50 பேர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல், பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தது. இந்தப் … Read more

ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்

மதுரை: ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில்  61 பேர் தற்கொலை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்து உள்ளார். மும்பை ஐ.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள், ஒன்றிய  கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேட்டிருந்தார். அதற்கு … Read more

தெலுங்கானா ஆளுனரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள்.. உச்ச நீதிமன்றத்தை அணுகிய மாநில அரசு

தெலுங்கானா ஆளுனரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள்.. உச்ச நீதிமன்றத்தை அணுகிய மாநில அரசு Source link