அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை கட்சி தலைமை தொடங்கியது. முதல்கட்டமாக, ஓபிஎஸ் படத்தை நீக்கி, பழனிசாமி கையெழுத்திட்ட அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் … Read more

பெட்ரோல், டீசல் விலையில் 300வது நாளாக மாற்றமில்லை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மக்களுக்கு பலனில்லை

சேலம்: கடந்தாண்டு  மே 22ம் தேதி சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.6.70 குறைந்து ரூ.94.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.  இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு பின், கடந்த 300 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. கடந்த 10 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. அதாவது நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.12 டாலருக்கு விற்கப்பட்டது. 120 … Read more

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர் வழக்கு; வங்கி ஆவணங்கள் கைப்பற்றிய போலீஸ்

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர் வழக்கு; வங்கி ஆவணங்கள் கைப்பற்றிய போலீஸ் Source link

கழிவறைக்கு செல்லும் போது நர்ஸிங் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துவுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவருடைய 19 வயது மகள் தரணி, அம்மாவட்டத்திலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டுக்கு அருகிலிருக்கும் கழிவறைக்கு சென்ற தரணி, திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் சத்தம்கேட்ட இடத்துக்கு வரும்போது, கழுத்தறக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கிடந்துள்ளார் தரணி. கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததால், சிறுதி நேரத்திலேயே தரணி … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியகுளம்: அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வஉசி தெருவை சேர்ந்த ஆறுமுகம் – மல்லிகா தம்பதியின் ஒரே மகனான ஜெயந்த் (37), ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் விவிபி ரெட்டியுடன் ஜெயந்த் சென்று கொண்டிருந்தார். சங்கே … Read more

‘மனித வெடிகுண்டாக மாறுவேன்’ என பேசிய உதயகுமாரை கைது செய்யக்கோரி போஸ்டர்

திருப்பூர்: ‘மனித வெடிகுண்டாக மாறுவேன்’ என பொது வெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயக்குமாரை கைது செய்யக்கோரி, அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் திருப்பூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 13ம் தேதி, மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், ‘‘அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்’’ என பேசினார். இந்த கூட்டம் அனுமதியின்றி நடந்ததாக மாஜி அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் … Read more

நாக்கில் காயம்பட்ட குட்டி யானை : டாப்சிலிப் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி

நாக்கில் காயம்பட்ட குட்டி யானை : டாப்சிலிப் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி Source link

காவல் பணியில் மகளிர் இணைந்ததன் பொன்விழா – பெண் காவலர் நலனுக்காக 9 அறிவிப்புகள்

சென்னை: மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கான காவல் வருகை அணிவகுப்பு நேரம் மாற்றம், சென்னை, மதுரையில் தங்கும் விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு காவல் துறை சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொன்விழா ஆண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். … Read more

தமிழக மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் விஜயா. இவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 12ம் தேதி அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் முடிந்து நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 பேரையும், விடுதலை செய்து இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

சூரிய அஸ்தமன காட்சியை பார்க்க முடியவில்லை.. கவர்னர் ஆர்.என். ரவி ஏமாற்றம்

சூரிய அஸ்தமன காட்சியை பார்க்க முடியவில்லை.. கவர்னர் ஆர்.என். ரவி ஏமாற்றம் Source link