அமெரிக்காவில் தமிழக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்

சென்னை: இந்தியா கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கடந்த 14-ம் தேதி ஆன்மிக பயணமாக அண்ணாமலை இமயமலை சென்றார். இமயமலையில் ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் … Read more

வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் எம்எல்ஏ பேசும்போது, “வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் என்ன பணிக்காக வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, … Read more

அண்ணாமலைக்கு எம்பி பதவி இல்லை! வேறு ஒருவருக்கு கொடுத்த பாஜக!

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எம்பி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் விவகாரம்: பேரவையில் முதல்வர் – எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை விவாகாரம் தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பொதுக்கூட்டம், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் போதைப்பொருள், கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க … Read more

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்து தான் – ஹெச் ராஜா

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உள்நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்ராமையா உள்ளிட்டோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.

“முதல்வர் ஸ்டாலினை பணியவைத்தது இந்து எழுச்சியே” – வானதி சீனிவாசன்

கோவை: “தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது,” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டத்துக்கு ஆளான வனத்துறை அமைச்சர் பொன்முடியும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்று … Read more

அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு, திருமண முன்பணம் அதிகரிப்பு: முதல்வரின் 9 முக்கிய அறிவிப்புகள் என்ன?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் … Read more

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானியர்கள் 200 பேர் தமிழகத்திலிருந்து வெளியேற்றம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, தமிழகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்திருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை … Read more

தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 … Read more

“தமிழ்நாடு மிகுந்த பெருமை கொள்கிறது” – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்துக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில்,நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய … Read more