புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியமைக்க பாஜகவினருடன் மத்திய அமைச்சர், புதுச்சேரியில் இன்று ஆலோசனையில் நடத்தினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்படுவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. நாளை பாஜக மாநில பொதுக்குழு கூடுகிறது. புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநில சிந்தனை அமர்வு கூட்டம் ஹோட்டல் அண்ணாமலையில் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய தொழில் … Read more

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள்.. சொன்னீங்களே, செஞ்சீங்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். 

வானிலை முன்னறிவிப்பு: ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.16) ஒரு சில இடங்களிலும், நாளை மறுநாள் செப்.17-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், செப்.18, 19 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், செப்.20, … Read more

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்த விவசாயி

எனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தவரால் பரபரப்பு. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. 

வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சியருக்கான அதிகாரத்துக்குத் தடை உள்ளிட்ட, வக்பு சட்டத்தின் சில விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 1) வக்புக்குச் … Read more

2.5 ஏக்கர் தோட்டம் வாங்க பெண்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

Nannilam scheme : பெண்கள் 2.5 ஏக்கர் தோட்டம் வாங்க இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.  

“எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய ராஜேந்திர பாலாஜி

சிவகாசி: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் படத்தைப் போட்டு எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள், என தவெக விஜய்யை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக சாடியுள்ளார். சிவகாசியில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் 117-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி வருகிறார். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் … Read more

ஈஷா கிராமோத்சவம்: ஒரு கையில் வாலிபால் ஆடி அசத்தும் கடலூர் தேவா

ஈஷா கிராமோத்சவம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவா என்ற இளைஞரின் திறமையை அங்கீகரித்து, ஒரு கையில் வாலிபால் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அவரது தனித்துவமான அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.   

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க வாய்ப்பே இல்லை – டிடிவி தினகரன்

சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். அதன் அர்தத்தை வரும் மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். 75 ஆண்டு காலம், 50 ஆண்டு காலம் வளர்ந்த கட்சிகளின் கட்டமைப்புக்கு … Read more

பெண்கள் பெயரில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தரும் தமிழக அரசு! எப்படி பெறுவது?

ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிரை நில உரிமையாளர்களாக்கும் நன்னிலம் திட்டத்தில் ரூ.5 லட்சம் மானியம், 100% பத்திரப்பதிவு இலவசமாக வழங்கப்படுகிறது.