சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். உள்நாட்டு போர் நடந்த போது தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்தேன். கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவுள்ளதால், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தேன். நான் இந்திய குடிமகன் இல்லை எனக் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து … Read more

பட்டியலின இளைஞரை ஆபாசமாக பேசிய திமுக ஒன்றிய செயலாளர் – சிறையில் அடைப்பு.!

சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோயிலில் கடந்த 26-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார் என்பவர் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுள்ளார்.  இதைப்பார்த்த மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மக்கள் இந்த தகவலை திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும், திருமலைகிரியின் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணிக்கம் மறுநாள் கோவில் முன்பு பஞ்சாயத்து கூட்டி அந்த வாலிபரை அழைத்து வருமாறு … Read more

தேர்தல் மன்னன் பத்மராஜன் 233-வது முறையாக மனு தாக்கல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மாநகராட்சி பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் காலை வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய்க்கிழமை துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் கே.சிவகுமார் வேட்பு மனுக்களை பெற்றார். இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் (65) 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் … Read more

வெங்கி ராமகிருஷ்ணன் நூலின் தமிழாக்கம் பிப்.6ல் வெளியீடு

சென்னை: பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர். இவர் எழுதிய ‘ஜீன் மிஷின்: ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்ற நூலின் தமிழாக்கப் பதிப்பை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம், காலச்சுவடு இணைந்து வெளியிடுகின்றன. சென்னை தரமணியில் உள்ள ஏஷியன் காலேஜ் ஆஃப்ஜர்னலிசம் கல்லூரி அரங்கில் நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி பிப்.6-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், ஏஷியன் காலேஜ் ஆஃப்ஜர்னலிசம் தலைவர் சசிகுமார் … Read more

ஒழுக்கச்சீலர் ஓமந்தூரார் ; விடுதலை இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராவார்!

உயிரைவிட மேலானது ஒழுக்கம் ; அவ்வொழுக்கமே ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் ; ஒழுக்கமில்லாத வாழ்வை வாழ்பவர் எவராகிலும் ; அவர் உயிரோடு இருந்தாலும்,  உயிரற்றவர் ஆவார் என்பது வள்ளுவர் பெருந்தகையின் வலுவான கூற்றாகும். அக்கூற்றின்படியே தன் வாழ்நாளை அமைத்துகொண்டார் ஓமந்தூரார்.  அன்றைய தென்னாற்காடு மாவட்டம் ஓமந்தூரில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் ஒன்றாம் நாள் பிறந்த அவரது இயற்பெயர் ராமசாமி ஆகும்.  அவர் பின்னாளில்  முதலமைச்சர் ஆனவுடன் அவரது பெயரோடு அவரது பிறந்த ஊரும் … Read more

சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்

நாகர்கோவில்: சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(37). சின்னமுட்டம் கிராமத்தை சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கபிலன், நெல்லை மாவட்டம் பெருமணலை சேர்ந்த  துரைராஜ் ஆகிய 5 மீனவர்கள் சவுதி அரேபியா நாட்டின் கத்திப் என்ற பகுதியிலிருந்து கடந்த ஜனவரி 21ம் தேதி அரேபிய முதலாளிக்கு சொந்தமான ‘ரஸ்மா அல் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளராக 'தேர்தல் மன்னன்'! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள்  4 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மீனாட்சிசுந்தரனார் சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாநகராட்சியின் பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது.  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் கே.சிவகுமார் வேட்பு மனுக்களை பெறுவதற்காக அமர்ந்திருந்தனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு … Read more

மெரினாவில் பேனா வைத்தால் உடைப்பேன்: கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

மெரினாவில் பேனா வைத்தால் உடைப்பேன்: கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம் Source link

குட் நியூஸ்..!! பிப். 15-வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more