பணம், பரிசு பொருள் கொடுப்பதை தடுக்க கூடுதல் போலீஸ்

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைக் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 4 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக உள்ள காவிரி ஆற்றுப்பாலம் சோதனைச்சாவடியில், நிலையான கண்காணிப்பு குழுவினரும் போலீசாருடன் இணைந்து தீவிரவாத கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்ளிட்ட முக்கியமான 36 இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் போலீசாரும், கண்காணிப்புக் குழுவினரும், பறக்கும் படையினரும் ஈடுபட்டு … Read more

தமிழகம் முழுதும்.. அதிர்வலையை ஏற்ப்படுத்திய சிறுமியின் மரணம்.!

ஆறு வயது சிறுமி ஒன்று கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் மீது இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில், ஹரிணி ஸ்ரீ என்ற ஆறு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே துடி துடிக்க உயிரிழந்து இருக்கின்றார். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. சிறுமி ஹரிணி ஸ்ரீயின் மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் அந்த … Read more

வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி..!!

தமிழ்நாடு அரசின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் வரும் 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி வரும் 3-ம் தேதி நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் நிர்வாகிகள் அமைதி பேரணியில் பங்கேற்று, காலை 7 மணியளவில் அண்ணா … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடக்க உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ம் தேதி மனு தாக்கல் செய்கிறார். தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான … Read more

பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநியில், தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா நேற்று காலை கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கினர். கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, பூர்ணாகுதி போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு … Read more

‘ஈரோடு கிழக்கு, வெற்றியே இலக்கு’; நாம் தமிழர் வேட்பாளரை அறிவித்த சீமான்!

‘ஈரோடு கிழக்கு, வெற்றியே இலக்கு’; நாம் தமிழர் வேட்பாளரை அறிவித்த சீமான்! Source link

#BREAKING: போலீசுக்கு சவால் விட்ட பாஸ்கர் தலைமறைவு… பதுங்கிய சிறுத்தையை வலைவீசி தேடும் காவல்துறை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆரணி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் சாதியின் அடிப்படையில் திட்டி உள்ளார். இதனால் கடந்த ஜனவரி 8ம் தேதி இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட பாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார்.  ஜாமீனில் வெளியே … Read more

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்…!

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து … Read more

பிப்ரவரி 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் வரும் பிப்ரவரி 1ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நேற்று (ஜன.28) நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (ஜன.29) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் … Read more

பாஜ கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பாஜ கவுன்சிலராக இருப்பவர் தனபாலன். இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராகவும் உள்ளார். இவருடைய வார்டுக்கு உட்பட்ட பகுதியான வ.உ.சி. நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கவுன்சிலர் தனபாலனிடம் அதே பகுதியை சேர்ந்த சுதன் … Read more