75-வது சுதந்திர ஆண்டையொட்டி தமிழகத்தில் 60 கைதிகள் முன்கூட்டியே விடுதலை

சென்னை: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாகநாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக ஒரு ஆலோசனையை வழங்கி, நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை விடுவிக்க அறிவுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து, தமிழக சிறைச்சாலைகளில் 66 சதவீத சிறைத்தண்டனை அனுபவித்து நன்னடத்தையோடு இருந்த 60 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து … Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு பிப்.1ல் கலந்தாய்வு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் போன்ற பட்டயப்படிப்புகளுக்கு 2022-2023ம் கல்வியாண்டிற்கு 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன. இவற்றில் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 27ம் தேதி www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு கடந்த 28ம் தேதி துவங்கியது. இன்று (30ம் தேதி) வரை நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் மாலை 5 மணிக்குள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். … Read more

#BREAKING | மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி | திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ம் தேதி அமைதிப் பேரணி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வாலாஜா சாலை முதல் காமராஜர் சாலை அண்ணா நினைவிடம் வரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி நடைபெற உள்ளது. பிப்ரவரி 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற உள்ளதாக திமுக தலைமை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், ”காஞ்சி தந்த … Read more

வீடு, வீடாக வாக்காளர் சரி பார்க்கும் பணியை தொடங்கிய அ.தி.மு.க.வினர்..!!

வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே ஈரோடு கிழக்கு தொகுதியில் 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு, தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 3 நாட்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் … Read more

இடைத்தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களில் இபிஎஸ் அறிவிப்பார் – செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்பதை, எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார் என, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தலைமையில் நூற்றிபதினோரு பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஈரோடு திருநகர் காலனியில் சாலையோர … Read more

ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களின் விலை திடீர் உயர்வு

சென்னை: ரயில்களில் விநியோகிக்கும் உணவு பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிருப்திஅடைந்துள்ளனர். இந்திய ரயில்வேயில் தினசரி 14,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரயில்களில் விநியோகம் செய்யப்படும் இட்லி, சாதம் வகை உணவுகள் உள்பட 70 உணவு பொருட்களின் … Read more

நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்

நாகர்கோவில்: திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரது உடல் நலம் தொடர்பாக கேட்டறிந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று பார்த்து நலம் விசாரித்தார். அவர் உடல் நலம் … Read more

மண்ணை வாரி அடித்து சிறுவர்கள் சேட்டை.. கோபமடைந்த சிறுவர்களை தாக்கிய பாதிரியார்..

தூத்துக்குடி பெரியதாழை மீனவ கிராமத்தில் பள்ளி கலைநிகழ்ச்சியின் போது, மண்ணை வாரி அடித்து சேட்டை செய்த சிறுவர்களை, பாதிரியார் ஒருவர் தாக்கி அமர வைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. புனித அருளப்பர் முடியப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு புனித சவேரியார் ஆரம்பப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடைக்கு கீழே அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி அடித்து விளையாடினர். இதனைக் கண்டு கோபமடைந்த பாதிரியார் சுசீலன், … Read more

அண்ணா சாலை கட்டிட விபத்து; சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது: மேயர் ப்ரியா

சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சென்னையில் ட்ரோன் மூலம் கால்வாய்களில் கொசு மருந்து அடித்து கொசு அழிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று சென்னை அண்ணா சாலையில் நடந்த விபத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “அந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சியில் முறையான அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் … Read more