சென்னையை ‘சிங்கப்பூர்’ ஆக மாற்றிக் காட்டுவார் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “ஜீபூம்பா என்ற ஒரு வார்த்தை சொன்ன உடனே சென்னை, சிங்கப்பூராக மாறிவிடாது. நிச்சயமாக சென்னையை முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவார்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து … Read more

3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வருக்கு, ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கஞ்சா வழக்குகளில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு, அதிகபட்சம் 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் சில வழக்குகளில் மரண தண்டனை கூட வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் பெறும் நிலை உள்ளது. … Read more

பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அண்ணன் – தம்பி கைது.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசா பாளையம் என்ற கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலு ராஜி என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தாய்-தந்தையை இழந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ராஜு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி மற்றொரு உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கேயும் ராஜுவின் சகோதரர் சிங்காரவேலு … Read more

டி.டி.ஹெச்., கேபிள் டிவி கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயர்வு.. பிப்.1ஆம் தேதி முதல் அமல்

டி.டி.ஹெச்., கேபிள் டிவி கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயர்வு.. பிப்.1ஆம் தேதி முதல் அமல் Source link

பாட்டி என கூறி அங்கன்வாடி மையத்தில் 2 வயது சிறுவனை கடத்த முயற்சித்த மூதாட்டி..

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்து இரண்டு வயது சிறுவனை கடத்த முயன்றதாக பிடிபட்ட மூதாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு இடைவேளையின்போது, மூதாட்டி ஒருவர், சிறுவனின் பாட்டி என்று கூறி அவனை அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்த பணியாளர்கள் சிறுவனை அனுப்ப மறுத்து மூதாட்டியை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூதாட்டி ஏற்கனவே இதுபோன்ற கடத்தல்களில் ஈடுபட்டவரா? அல்லது … Read more

தஞ்சை: நேரடி கொள்முதல் நிலையம் வேண்டி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், விழுதியூர் ரங்கநாதபுரம் இரும்புதலை வனக்குடி திருப்பாலைக்குடி உள்ளிட்ட 19 கிராமங்களில் இருந்து சுமார் 5000 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அறுவடை செய்த நெல் மூட்டைகளை ரங்கநாதபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு சுமார் 2000 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால், நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் கடந்த ஒரு வாரமாக நெல் மூட்டையில் தேங்கி கிடந்தது. தற்போது … Read more

புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜி20 மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வல்லவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் ஆட்சியர் வல்லவன் கூறுகையில், ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு, புதுச்சேரியில் வருகிற 30, 31 தேதிகளில் நடைபெறுகிறது. 30ம் தேதி (நாளை) சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் … Read more

இபிஎஸ்.,க்கு போதிய பாதுகாப்பு வேண்டும்… மாவட்ட எஸ்.பி.,யிடம் ஆர்.பி உதயகுமார் மனு..!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற உள்ள இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மேற்பார்வையில் நடைபெற்று … Read more

உடற்கூராய்வு செய்யப்பட்ட பத்மபிரியாவின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்

சென்னை அண்ணாசாலையில் கட்டட சுவர் விழுந்து பலியான ஐ.டி.ஊழியர் பத்மபிரியாவின் உடற்கூராய்வு முடிந்து, அவரின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு ஆம்புலன்சில் உடல் கொண்டு செல்லப்பட்டது. பழமையான தனியார் கட்டத்தை இடிக்கும்போது, சுவர் இடிந்து, சாலையில் நடந்து சென்ற பத்மபிரியா மீது விழுந்ததில், அவர் உயிரிழந்தார். விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, பத்மபிரியாவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து வெளியே கொண்டுவரப்பட்ட உடலை … Read more